நீரை வெறுக்க வைத்த…? மழை வெள்ளம்…..! (பகுதி 4)

(சாகரன்)

100 வருடத்தில் ஒரு தடவை நடைபெற்ற மிகப் பெரிய வெள்ள அனர்த்தம் என்று பலராலும் சொல்லம்படும் கேரளா வெள்ள அனர்த்தம் 1 சத விகித (நூற்றிற்கு ஒன்று) வாய்பை கொண்டிருந்தைமையினால் கேரள அரசோ அல்லது இந்திய மத்திய அரசோ இதற்கான முன் எச்சரிக்கைத் தயாரிப்புகளில் அதிகம் ஈடுபட்டிருக்கவில்லை. ஆகஸ்ட் 2017 அமெரிக்காவின் கியூஸ்ரன் நகரில் இல் நிகழ்ந்த வெள்ள அனர்த்தங்களை ஒத்ததாக இது இருந்தது. வழமையான கேரளா மழைக்கால மழையை விட 47 வீதம் அதிகமாகவே இந்த மழை வெள்ளம் ஏற்பட்டது. பூமியின் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ்னால் அதிகரிக்கும் போது வெறும் 10 வீத மழை அதிகரிப்பை எதிர்பார்க்கும் சூழலியல் விஞ்ஞானிகள் இந்த 47 வீத அதிகரித்த மழை வீழ்ச்சியும் 100 வருடத்தில் ஒரு முறை நடைபெற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பார்க்கவும் இல்லை. சிறப்பாக பொது மக்கள் இந்த மழையால் ஏற்படப் போகும் அனர்த்தங்களை தமது வாழ்வின் 100 வருடங்களில் யாரும் கண்டிருக்மாட்டார்கள் அதாவது தமது ஆயுளில் எந்தக்காலத்திலும் கண்டிருக்க மாட்டார்கள். இதுவே மக்கள் இந்த நீரை வெறுக்கும் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு காரணம்.

அதுவும் கேரள தேசம் எங்கும் மலைக்கு மேற்கு பக்கமாக நீண்டு விரிந்திருக்கும் கடலை நோக்கிய நீர் ஓட்டம் மண்சரிவுகளையும் ஆறுகளின் பதிய பாதைகளும் கிளைகளின் புதிய உருவாக்கமும் மண்சரிவுகளினால் ஏற்பட்ட நிலப்பரப்பு மாற்றமும் அதிக பாதிப்புக்;களை ஏற்படுத்ததியிருக்கின்றது. ஆற்றை, ஆற்றுப்படுக்கையை மண்சரிவை சரிவான நிலப்பரப்பை தவிர்த்து வாழ்ந்தும் ஆண்டாண்டு காலமாக மழையின் போது இடம் பெயர்ந்தும் தவிர்த்தும் வாழ்ந்த மக்கள் இந்த பதிய ஆற்றுக் கிளைகளும் நிலப்பரப்பின் இடமாற்றமும் அவர்கள் எதிர்பார்த்த பாதுகாப்பு வலயங்களை பாதுகாப்பற்ற வலையங்களாக மாற்ற மரணங்களுக்கும் அகதி இடப் பெயர்வுகளுக்கும் சொத்து நாசங்களுக்கும் வாய்பை ஏற்படுத்தி விட்டது.

மண்ணிற கலரில் அமைந்த சேறுகளும் சகதிகளும் வெள்ளம் வடிய ஆரம்பித்த பின்பு கேரளாவின் பல நகரங்களின் வீதிகளிலும் புதிதாக உருவான ஆற்றுப்பாய்சல் கிளைகளிலும் கிராமத்து உள்வீதிகளிலும் அவதானிக்க கூடியதாக இருந்தது. இது கேரளப் பூமியின் புவியில் தளப்பரப்பை இடம்பெயரவைத்துள்ள மண்சரிவு மண் இறக்கம் நிலம் இடம் பெயர்தல் போன்றவற்றை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அனுமானிக்க உதவுகின்றது. எமது உள்ளுர் பாசையில் சொல்வதென்றால் காணிகளின் எல்லைக் கல்லுகள் இடம் பெயர்ந்துள்ளன. நாம் நம்பும் அடுத்த காணிக்காரன் எல்லையை மழைகாலத்தில் அரக்கி எனது காணியை பிடித்து விட்டான் என்பதல்ல இது. மழையின் சீற்றம் வெள்ளத்தின் பாய்ச்சல் இதனை தணித்து செல்ல அனுமதிக்கும் மரங்கள் அற்ற ‘சுதந்திர” பாய்சல் இவற்றை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதிலிருந்து அனிவரும் காலங்களில் மக்களை காப்பாற்ற 100 வருடத்தில் வெள்ளம் என் செய்தது என்ற மனநிலையில் இருக்கும் மக்களை 100 வருடத்தில் ஒரு தடவை என்ன செய்திருக்கின்றது என்பதை மனமாற்றத்திற்கு உள்படும் வகையில் அறிவூட்டப்பட வேண்டும். இதற்கு பூமி வெப்பமாதலும் மரங்களை அழித்தலும் பிரதான வடிகால்களாக அமைகின்றது நகரத்தை உருவாக்க காடுகளை அழித்து அதற்குள் இருக்கும் மரங்களை ‘கட்டுப்பாடற்று அழித்த மனித குலத்தையே அழித்து விடும் என்று ஈரமான் அழகிய பூமி மக்களும் உணர்ந்துதான் ஆகவேண்டும.; இது எங்கள் மலையக மக்களுக்கும் ஒரு பாடம்தான் ஏன் அமெரிக்கா போன் ‘வளர்ச்சியடைந்த” நாடுகளுக்கும் பாடம் தட்டையான நிலப்பரப்பிலும் இந்த பேரழிவுகள் ஏற்பட வாய்புகள் நிறையவே உண்டு

மிக முக்கியமானது மழை ஏற்படும் போது மழைத் துளியின் வேகத்தை தடுப்பதும் நிலத்தில் வீழ்ந்த நீரின் காட்டாற்று வேகத்தையும் தடுப்பதுவும் மரங்களே. கடந்த 40 வருடங்களில் கேரளா தனது வனங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் அரைவாசி மரங்களை இழந்திருக்கின்றது. கிராமங்களை நகரமயமாக்குதல் என்ற வகையிற்குள் இந்த மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுவே இந்த வெள்ளத்தின் வேகத்தை காட்டாற்று அட்டகாசத்தை தடுத்து தணித்து ஆனந்த வெள்ளமாக மாற்ற தவறிவிட்டதன் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைகின்றது.

மனிதர்களில் பலரும் மரங்களின் அவசியத்தை பழம் தரும் மரங்கள் காய் தரும் மரம் என்பதற்கு அப்பால் வேண்டாப் பொருளாகவும் இதன் இலையுதிர்த்தல் குப்பைகளாக தமது தொல்லை தருகின்றது என்று வெட்டி எறிதல் என்ற பொறி முறையூடு தமது சோம்பலுக்கு நியாயத்தை கற்பித்து வருகின்றனர். இலங்கை மலையகத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மண்சரிவுகளுக்கும் இந்த மரம் அழிப்பிற்கும் நிறையவே தொடர்பு உண்டு

(இன்னும் வரும்….)