நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, க்ஸோசா என்ற ஆப்பிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 ல் பிறந்தார். அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla). இந்த பெயருக்கு ’பல கிளைகளுடைய மரம்’ அல்லது ’பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பள்ளி ஆசிரியை, ’நெல்சன்’ என மாற்றி வைத்தார்.

இவர் நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்கத் தலைவர். மக்களாட்சி முறையில் தேர்வான முதல் தென்னாப்பிரிக்க அதிபர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் இவர். போராட்டங்களினால் தனது வாழ்வின் இருபத்தேழு ஆண்டுகளை இவர் சிறையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. அமைதிக்கான நோபல்பரிசு, இந்தியாவின் பாரத ரத்னா மற்றும் நேரு சமாதான விருது உட்பட, உலக நாடுகளின் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். மதிப்பிற்குரிய உலக தலைவர்களில் ஒருவரான இவர், 2013 ஆம் ஆண்டு தனது 95 வது வயதில் காலமானார்.

இவரின் பொன்மொழிகள் .

# நீங்கள் உங்கள் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்த விரும்பினால், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிறகு அவர் உங்கள் பங்குதாரர் ஆகிவிடுவார்.

# எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்.

# உங்களால் இந்த உலகை மாற்ற பயன்படுத்த முடிந்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே.

# ஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோற்றமளிக்கும்.

# பணத்தால் வெற்றியை உருவாக்கிவிட முடியாது.

# உயர்ந்த சிந்தனை உயர்ந்த மனதிலிருந்தே வருகின்றது.

# சூழ்நிலைகள் அனுமதிக்கும்போது அஹிம்சை ஒரு நல்ல கொள்கை.

# ஒரு நல்ல தலைமை மற்றும் ஒரு நல்ல இதயம் ஆகியவை எப்போதுமே ஒரு வல்லமைமிக்க இணை.

# தண்ணீர் கொதிக்கத் துவங்கும்போது அதன் வெப்பத்தை அணைப்பது முட்டாள்தனமான செயல்.

# நாட்டின் குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்த நாடும் உண்மையில் மேம்பாடடைய முடியாது.

இவரை பற்றி தெரிந்திருக்கவேண்டியவை .
உலக வரலாற்றிலேயே சிறையில் நீண்ட காலம் கழித்த தலைவர்கள் கிடையாது. பல ஆண்டுகள் இவர் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்.
1990 ஆம் ஆண்டு இந்தியாவின் பாரத ரத்னா விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது. உலகிலேயே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றால், அது நெல்சன் மண்டேலாவுக்கு மட்டுமே.
தென்னாப்பிரிக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்தது.
மண்டேலாவின் கைவிரல் ரேகை ஆப்பிரிக்க கண்டத்தைப் போன்ற வடிவத்தைக் கொண்டது அவ்வளவுக்கு அவர் நாட்டுப்பட்டுள்ளவர்.

இவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

(Sutharsan Saravanamuthu)