பற்குணம் A.F.C ( பகுதி 85 )

யாழ்பாணத்தில் சைவ பரிபாலன சபையும் நாவலர் சம்பந்தமான ஒரு அமைப்பும் நாவலர் தொடர்பாக ஒரு புத்தக வெளியீடு ஒன்றை செய்யவிருந்தது.அந்த விழாவின் பிரதம விருந்தினராகவும் புத்தக வெளியீட்டாளராகவும் அரச அதிபர் பஞ்சலிங்கம் அழைக்கப்பட்டு இருந்தார்.

 

இந்த புத்தகம் சில சமூக ஆர்வலர்கள் கண்களில் சிக்கியது.அதில் சாதிகளைப் பற்றியும் பல அவதூற்ற பதிவுகள் இருந்தன.அக் காலகட்டத்தில் சகலமைப்புகளும் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தனர் .இதன் காரணமாக இந்தப் புத்தகம் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் பலர் பேசப் பயந்தனர்.

பற்குணம் இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளதால் அவர்கள் பற்குணத்துடன் இது சம்பந்தமாக கலந்துரையாடினர்.பற்குணம் அந்த புத்தகம் ஒன்றைப் பெற்று படித்தார்.அவர் எதுவும் பேசவில்லை.விழா ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுவிட்டது.இறுதி நாளுக்கு முன்பாக பற்குணம் பஞ்சலிங்கத்தை சந்தித்தார்.

சேர்,நீங்கள் இந்தப் புத்தக விழாவில் பங்கேற்க இருப்பதாக அறிந்தேன்.உண்மையா என கொஞ்சம் இறுக்கமாகவே கேட்டார்.அதற்கு அவர் ஆம் என பதில் தந்தார்.இந்த வெளியீட்டு விழாவில் நீங்கள் கலந்துகொண்டால் நாளை காலை கச்சேரி வாசலில் இப் புத்தகங்கள் யாவும் கொழுத்தப்படும் என எச்சரித்தார் .

நிலைமை விபரீதமாகப் போவதை உணர்ந்த பஞ்சலிங்கம் எனக்கு இந்த புத்தகம் பற்றிய விபரங்கள் தெரியாது.என்னையும் அழைத்தார்கள் மரியாதை கருதி நான் சம்மதித்தேன்.ஏதாவது சிக்கல் என்றால் நான் விலகிக் கொள்கிறேன் என்றார்.அதற்கு பற்குணம் விலகுவது மட்டுமல்ல இந்த புத்தகம் வெளியே வரக்கூடாது.வந்தால் அதன் விளைவு பாரதூரமாக இருக்கும் என எச்சரித்தார் .

அந்த புத்தக வெளியீடு நிறுத்தப்பட்டது.இது தொடர்பாக சிலர் புலிகளிட்ம் முறையிட்டனர்.புலிகளும் பற்குணத்தை விசாரிக்க வந்தனர்.பற்குணம் அந்தப் புத்தகத்தைப் படித்தீர்களா .படிக்காவிட்டால் படித்துவிட்டு வந்து கேள்வி கேட்குமாறு கூறினார்.வந்தவர்களில் ஒருவர் பரமு மூர்த்தி.மற்றவர் யோகி.

மூர்த்தி பற்குணம் தொடர்பாக சமூகம் என்ற ரீதியில் அக்கறை உள்ளவர்.அவருக்கு பற்குணத்தின் கேள்வியில் சந்தேகம் ஏற்பட கதையை வேறு விசயத்துக்கு திருப்பிவிட்டார்.அவர்கள் அப்படியே திரும்பிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து அந்தப் புத்தகம் புலிகளின் கவனத்துக்கும் போனது.அதில் மீனவ சமூகம் தொடர்பான தரக்குறைவான பதிவுகளும் இருந்ததால் அது தடைசெய்யப்பட்டது.

————————————————————————————
பற்குணம் யாழ்பாணத்தில் பொறுப்பேற்றபின் வாகனம் இருக்கவில்லை.எனவே தன் தேவைகளுக்காக ஒரு வெஸ்பா ஸ்கூட்டர் வாங்க தீர்மானித்தார்.அதன்படி ஒருவர் கொடுத்த தகவலின்படி ஓட்டுமடம் பகுதியில் ஒரு ஸ்கூட்டரை பார்வையிட்டார்.பிடித்துவிட்டது.விலையக் கேட்டார்.அவர் 20 ஆயிரம் ரூபா என்றார்.பற்குணம் ஒருபோதும் இந்த மாதிரியான பேர விவகாரங்களில் ஈடுபடுவதில்லை .அவரிடம் அவ்வளவு பணம் இல்லாததால் வேண்டாம் எனசொல்லி திரும்பி வந்துவிட்டார்.

இதை அந்த வீட்டின் அயலவர் வீட்டுக்கு வந்த பற்குணத்தின் கீழே வேலை செய்யும் ஊழியர் கண்டுவிட்டார்.அவர் பற்குணம் போனபின் அந்த ஸ்கூட்டர் உரிமையாளரிடம் வினாவினார்,அவரும் விசயத்தை கூற அவருக்கு பற்குணத்தின் நிலை விளங்கிவிட்டது.அவரோ அந்த ஸ்கூட்டரை வாங்கி பற்குணத்தின் பெயரில் பதிவு செய்து பற்குணத்தின் அலுவலகத்தில் கொண்டுவந்து ஒப்படைத்தார்.பற்குணம் மறுத்துவிட்டார்.வேறு சிலரும் பிடிவாதமாக வாதிடவே பற்குணம் அதைப் பெற்றுக் கொண்டார்.

மறுநாள் தன் மைத்துனரான மாணிக்கம் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபா கடனாக வாங்கி அந்த ஊழியரிடம் கொடுத்தார்.அதைக் கொடுத்துவிட்டு இனிமேல்தான் நீங்கள் என்னிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.நீங்கள் பண்ணிய இந்த உதவியை காரணமாக்கி நீங்கள் தவறுவிட்டால் நான் மன்னிப்பேன் என எதிர்பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)