பிக்குகளின் மகாவம்சக் கனவு இலங்கைத் தீவை நாசமாக்கி வருகிறது

(வேதநாயகம் தபேந்திரன்)

இலங்கையின் நீதித்துறை தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தண்டனை வழங்க மட்டுமே உருவாக்கப்பட்டது என்ற ஐயம் முல்லைத்தீவு செம்மலை விவகாரத்தால் மீண்டும் தோன்றியுள்ளது. இது சிங்கள பௌத்த நாடு என்பதை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதை தேரர்கள் ஆணித்தரமாகக் கூறியுள்ளனர்.