புதிய ஜனாதிபதி: மீண்டும் ஒரு தோல்வி

(இலட்சுமணன்)

இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும்.