புலிகளின் மாவீரர் தின படிப்பினை. 

பிரபாகரன் பல நாட்கள் தன் குடும்பத்தாலேயே
ஒதுக்கி வைக்கப்பட்டவர். அவரது திருமணத்திற்கே
பெற்றோர் அழைக்கப்படவில்லை.
2 வீடு தமக்கு இருந்தும் பிரபாகரனால் தன்
பெற்றோர் ஊரில் இருக்க வீடு கிடைக்காமல்
எவ்வாறு அலைந்து களைத்து கடைசியில்
தமிழ்நாட்டுக்கு ஓடினார்கள் என்பதையும்
“அந்த கோபங்களின் வலி இப்போது ஆறிவிட்டது”
என்று வெளிப்படையாகவே 6 வயது மூத்த தமையன்
பிரபாகரனின் 50 வது பிறந்தநாள் மலருக்கு
எழுதியதில் குறித்துள்ளார்.
காணி அதிகாரியாக இருந்தாலும் சகாயம்
IAS போன்ற மிகநேர்மையான வேலுப்பிள்ளை
தன் குடும்பத்திற்கென ஒரு சதமும் ஊழலால்
சம்பாதிக்கவில்லை. தமிழகத்திலிருந்த மனோகரனை
வெளிநாட்டுக்கு அனுப்பவும் அவரிடம் பணமிருக்கவில்லை
தானே மனோகரன் நார்வே செல்ல உதவினார்
என்பதை நெடுமாறன் எழுதிய பிரபாகரன் சரிதப்புத்தகத்தில்
குறித்துள்ளார். 2 சகோதரிகளுக்கு சீதனம்
கொடுத்து திருமணம் செய்வித்ததே குடும்பத்துக்கு பெரும் செலவல்லவா!
மனோகரன் ஆழக்கடலோடி கப்பலில் வேலைசெய்த பணமெல்லாம்
சகோதரிகளின் திருமணத்தோடு தீர்ந்து விட்டது. தகப்பனைப்போல
களவெடுக்க தெரியாத தங்க மகன்தான் மனோகரனும்.
ஒழுக்கத்தில் தகப்பனைப்போல உரிச்சுப் படைக்கப்பட்டவர்.
மதிவதனியின் தம்பி பாலச்சந்திரன்
புலிகளுக்கு போரிட்டு மடிந்ததுபோல பிரபாகரனின்
சகோதரம் ஒன்றும் புலிகளோடு நேரடியாக
பங்கு பற்றாததையும் இப்பின்னணியிலேயே
விளங்கவேண்டும்.
2002 க்குப்பிறகே பிரபாகரனே தமக்குகொள்ளி
வைக்கவேண்டும் என்று பெற்றோர் வன்னியில்
குடிவந்தார்கள். கடைசியில் நாலு பிள்ளைகளில்
யாரும் பெற்றோருக்கு கொள்ளி வைக்கமுடியவில்லை.
பிரபாகரனுக்கு கடைசியில் கொள்ளிவைத்தது
பிரபாகரனே அரசகட்டிலிலேற்றிவைத்த மகிந்ததான்.
கல்லறையல்ல அவருக்கு ஒரு மண்ணறை
யும் கிடைக்கவில்லை.
– நட்சத்திரன் செவ்விந்தியன்.