புலிகளின் வதை முகாம் இது

ஒருவரைப் படுக்க வைத்து இந்த இரும்பு வளையத்தை காலில் வைத்துப் பூட்டிவிட்டால் அவரால் அசைய முடியாது எழுந்திருக்க முடியாது. இப்படியான கொடூரமான சித்திரவதை பொல்பொட் பாணியில் வன்னியில் புலிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சித்திரவதை முகாம் முல்லைத்தீவுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

உளவியல் ரீதியாக அந்த மனிதர் பாதிக்கப்படுவார். புலிகளின் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்கள் பலர் மனநோயாளிகளாக மாறியுள்ளார்கள்.

இராணுவம் குடாநாட்டைக் கைப்பற்றியபோது தென்மராட்சியிலுள்ள தம்பு தோட்டம் என்ற இடத்தில் புலிகளின் சித்திரவதை முகாமைப் பார்வையிட்ட ஒருவர் தன்னால் இரவு முழுவதும் நித்திரை கொள்ளமுடியவில்லை என்று சொன்னார்..

புலிகளின் சித்திரவதை முகாமில் சித்திரவதைகளை அனுபவித்த தோழர் மணியம், மற்றும் அருள்பேட், மற்றும் பாபு என்பவர்கள் தெய்வாதீனமாகத் தப்பி வந்துள்ளார்கள் . அவர்கள் புலிகள் செய்த சித்திரவதைகளை விபரிக்கிறார்கள்.

புலிகளின் சித்திரவதைக் கூடத்தில் சித்திரவதையின் கொடுமையை அனுபவித்த ஒருவரால் எழுதப்பட்டிருக்கும் வாசகம் “கடவுளே எக்காரணம் கொண்டும் இங்கே யாரையும் அனுப்பி வைக்காதே”

(Rahu Rahu Kathiravel)