புலிகளுக்காக இனவாதம் வளர்த்து, கம்பு சுத்தும் அனைவருக்கும் இது சமர்ப்பணம்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓர் ஆனித்திருநாளில் மறைந்த திரு.அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு உரித்தான வீடொன்று லண்டனில் சீல் வைக்கப்பட்டது. அது தெரியாமல், நான் பாட்டுக்கு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கும் படிப்பித்துக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன்.