பொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தருமாறு பொதுமக்களிடம் கோருவதானது, வெற்றுக் காசோலையொன்றைக் கேட்பதற்குச் சமமாகும். ஏனெனில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து, என்ன செய்யப் போகிறார்கள் என்பதை, அவர்கள் நாட்டு மக்களுக்கு இன்னமும் கூறவில்லை.