பொது மக்கள் மீதான தாக்குதலை முக்காலதிலும் யாரும் ஆதரிக்கவில்லை……வெறுக்கின்றனர்

(சாகரன்)

1983 ஜுலை 24…. தென் இலங்கை எங்கும் தமிழ் மக்களுக்கு எதிராக கலவரங்கள் கொலைகள் கொள்ளைகள் சொத்து எரிப்புகள் நடைபெற்றன. இத்தாக்குதலை செய்தவர்கள் சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சிகு வந்த இலங்கை பௌத சிங்கள கட்சியும் அதன் அரசும். இத் தாக்குதலின் பின்பு இத்தாக்குதல் சிங்களவர் முழுவதுமாக தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டதாக முழுத் தமிழ் மக்களாலும் உணரப்படவில்லை. இத்தாக்குதலை மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் வெறுத்தனர்….. ஆதரிக்கவில்லை.