பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை

(புருஜோத்தமன் தங்கமயில்)

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் என்று பல்வேறுபட்ட தடைகளைப் பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாள்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு-கிழக்கின் எட்டு மாவட்டங்களின் ஊடாகப் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது.