மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை ! ~ அக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்லது?

பொருளாதாரம் பற்றிப் பேசுவோர் மத நம்பிக்கையின் காரணமாக மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதுபற்றி வாய் திறப்பதில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அரசுக்கு மக்கள் செலுத்தும் வரியைவிட மதக் காரணங்களுக்காக – பண்டிகைகளுக்காக – கோயில் குளங்களுக்காக – சடங்குகளுக்காக மக்கள் செலவிடும் தொகைதான் அதிகம் – மிக அதிகம்.