மட்டுநகர் கல்லடி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை, பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்து, மட்டக்களப்பு கல்லடிசுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக ஊழியர்கள், இன்று செவ்வாய்க்கிழமை 22.08.2017 கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள்நிறுவகத்துக்கு முன்னால் ஒன்று திரண்ட கல்விசார் மற்றும் கல்விசாராஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதி மாணவர்கள்சிலரால் ஆக்கிரத்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்போராட்டம் எனும் போர்வையில் எமது கலாசார விழுமியங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் உடனடியாக அம்மாணவர்கள், நிர்வாக கட்டடத்தொகுதியிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்