மட்டு. மாவட்டத்தில் உருவாகும் மிகப் பெரும் நீர்ப்பாசனக் குளம்

விளக்கம் தருகிறார்
திட்டப் பணிப்பாளர்
எந்திரி கே.சிவபாலசுந்தரம்

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. சுமாா் 90,000 ஏக்கர் வயல்கள் நெற்செய்கைக்கு மட்டும் உள்வாங்கப்பட்டுள்ளன. 27 பாரிய, மத்தியதர, குளங்கள் நீர்ப்பாசனத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை விட 487 சிறுகுளங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.