மலையக – தாயக திரும்பியோருக்கான இயக்கத்தின் நோக்கம் குறித்து சில குறிப்புகள்

பிரிட்டிசாரின் வருகையும் தமிழர்கள்  வெளியேற்றமும்.

வணிகத்துக்காக வந்த பிரிட்டிசார் இந்திய நாட்டைத் தமது காலனி நாடாக ஆக்கினர். நாட்டை ஒட்டச் சுரண்ட அனைத்துவகையிலும் உரிமை மீறலைக் கையாண்டனர். மூலதனத்தைக் குவிக்கத் தொடங்கியவர்களின் பசித்தீரவில்லை. அதை மென்மேலும் பெருக்கிக்கொள்ள தமது ஆதிக்கத்தின் கீழுள்ள நாடுகளில் பயிர் உற்பத்தியில் ஈடுபடுத்த, இந்தியாவில் இருந்து மக்களை கொண்டுசெல்லும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.