மலையக மக்களின் போராட்டம் மழுங்கடிகப்பட்டிருக்கின்றது

மலையக மக்கள் தற்பொழுது ஒரு உணர்வுடன் எந்த வேறுபாடுகளும் இன்றி ஒரு கோரிக்கையின் கீழ் ஒன்றுபட்டு நிற்கிறீர்கள். இத்தனை நாட்கள் தொடரும் தொடர் போராட்டம் மக்களின் சக்தியை அரசுக்கும் முதலாளிகளுக்கும் நன்கு உணர்த்தியிருக்கும்.

மக்களின் போராட்டத்தை வலுவிழக்கும் வண்ணமே இப்போதைய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவ் ஒப்பந்தத்தில் சம்பளம் வழங்கப்படும் அம்சங்களில் புதிதாக ஒன்றை ஏட்படுத்தியுள்ளனர். உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140ரூபாய் என கூறப்பட்டுள்ளது இது எந்த அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது என்பதின் ஊடாக நம்மை ஏமாற்றியுள்ளார்கள்.

உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு என்பது, நிறுவனத்தின் உற்பத்தி கூடினாலும், சந்தையில் கேள்வி கூடினாலும், தேயிலையின் விலை அதிகரித்தாலும் மாத்திரமே இந்த 140ரூபாய் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். நீங்கள் வேலை செய்யும் தோட்டம் அப்படியே இருக்குமாயின் இந்த சம்பளம் கிடைக்காது.
அடிப்படை சம்பளம் – 500
விலை பகிர்வு கொடுப்பனவு – 30
வரவிற்க்கான கொடுப்பனவு – 60 சேர்த்து 590ரூபாய் சம்பளம் மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

முன்னைய சம்பள முறையில் அடிப்படை சம்பளம் 450 ரூபாயும், விலை பகிர்வு கொடுப்பனவு 30 ரூபாயும்,
வரவிற்க்கான கொடுப்பனவு 140 ரூபாய் சேர்த்து 620 ரூபாய் காணப்பட்டது. கடந்த ஒப்பத்தந்ததுடன் ஒப்பிடும் பொழுது 110 ரூபாய் அதிகரிப்பது போன்று தெரிந்தாலும் புதிதாக ஒரு அம்சத்தை உண்டாக்கி முன்னர் இருந்த சம்பளத்தை விட 30 ரூபாய் சம்பளத்தை குறைத்து போராடிய மக்களை நேரடியாக பழிவாங்கியுள்ளனர்.

மலையக நண்பர்களே! உங்களால் பற்றவைக்கப்பட்ட தீக்குச்சிகளை அணைக்க முயற்சிகள் நடைபெறுகிறது, உங்களுக்கு என்று சரியான தலைமைகள் இல்லாவிட்டாலும் இப் போராட்டத்தை கைவிடாது தீப்பந்தமாக மாற்றி எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றியமைக்க ஒன்றுபட்டு செயல்படுங்கள்..

(Vinoth Balachandran with விழுதுகள் சி.தினேஷ்)