மாணவர்களின் கொலைக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் போராட்டத்திற்கு யார் தலமை தாங்கவேண்டும் …?

(சாகரன்)

மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்தும் இதற்கு நீதிகோரியும் பிரதேசம் தாண்டி இன மத மொழி வேறுபாடுகள் இன்றி மக்கள் இயல்பாக வீதியில் இறங்கி போராடினார்கள். இந்த ஐக்கியமான போராட்டத்தை ஏனைய விடயங்களிலும் விஸ்தரிப்பதற்குரிய தலமையை… செயற்பாட்டை… நாம் இனம் மொழி சமய வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கியிருக்கு வேண்டும் அவ்வாறு நாம் செய்வில்லை.

அண்மையில் நடைபெற்ற மலையக மக்களின் சம்பள உயர்வுசக்கான உரிமைப் போராட்டத்திற்கும் இன அடையாளம் மலையக மக்கள் என்ற அடையாளங்களுக்கு அப்பால் இலங்கையின் கடைநிலை உரிமையுள்ள தொழிலாளர்கள் என்ற வகையில் நாம் ஆதரவு கொடுத்து போராடி இருக்க வேண்டும் அப்படி செய்திருந்தால் வெறும் ஏமாற்று 730 இற்குள் இந்தப்போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்க மாட்டாது. மலையக மக்கள் தயாராக இருந்தனர் பரந்துபட்ட அளவில் வீதியில் இறங்கியிருந்தனர். இந்த மக்கள் மத்தியில் இருந்த தொழில் சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்கள் என்று குறுக்கி கொண்டு ஆதரவு? தெரிவிக்க வடக்கு தலமை இன அடையாளத்தை காட்டி தமக்கு இதனால் வாக்குகள் கிடைக்குமா? என்று கணக்கு போட்டது.

இன்று தவிர்த்திருக்கப்படவேண்டிய மாணவர் கொலையைக்கான நீதியும் இது போன்றவை தொடரமுடியாமல் நிறுத்துதலும் இன மத மொழியிற்கு அப்பால் இணைந்போராடுவதற்கு ஊடாகவே சாத்தியப்படுத்தலாம். இதற்கான அறியப்பட்ட அமைப்பாக அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் காணப்படுவதினால் இவ் அமைப்பு இப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் இதற்கு அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் ஆதரவு கொடுத்து செயற்படவேண்டும். இதே கருத்தியல் நிலையில் சகல தரப்பிலும் அமைப்புக்க ள்பல முன்ணியில் தோற்றப்படாததாக எம் சூழலில் காணப்படுகின்றன இவர்கள் முன்னிலைக்கு கொணடுவரப்படவேண்டும். இவர்களின் தலமையே மக்களின் விடிவிற்கு வழி சமைக்கும்