முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!

முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.


“குழந்தைகள் உரிமை”
ஐநா குழந்தைகள் உரிமை உடன்படிக்கையில் இந்திய அரசு கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளது (UN Convention on the Rights of the Child). http://www.ohchr.org/en/professionalinterest/pages/crc.aspx
இந்த உடன்படிக்கையின் 4 ஆம் பிரிவின்படி, குழந்தைகளின் அனைத்து உரிமைகளையும் காப்பது அரசாங்கத்தின் கடமை (Protection of rights: Governments have a responsibility to take all available measures to make sure children’s rights are respected, protected and fulfilled.)
இதன் 24 ஆம் பிரிவின் படி, குழந்தைகள் மீது ஆபத்தான பாரம்பரிய சடங்குகளை திணிப்பதை அரசு தடுக்க வேண்டும். (States parties shall take all effective and appropriate measures with a view to abolishing traditional practices prejudicial to the health of children.)
“பெற்றோர் கடமை”
பதினெட்டு வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் மீது பெற்றோருக்கு உரிமை உண்டு. ஆனால், அது உரிமை அல்ல, கடமைதான். குறிப்பாக, பெற்றோர் எதைச் செய்தாலும், அது அந்தக் குழந்தையின் நலத்துக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் – என்று ஐநா குழந்தைகள் உரிமை உடன்படிக்கையின் 18 ஆம் பிரிவு குறிப்பிடுகிறது.
States Parties shall use their best efforts to ensure recognition of the principle that both parents have common responsibilities for the upbringing and development of the child. Parents have the primary responsibility for the upbringing and development of the child. The best interests of the child will be their basic concern. (Article 18).
“மனித உரிமைகள் மீறல்”
மொத்தத்தில் – குழந்தைகள் நலனுக்காக ஒரு தலைவர் அலகு குத்திக்கொண்டால் – அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், தலைவர்கள் நலனுக்காக குழந்தைகளுக்கு அலகு குத்துவது மாபெரும் குற்றம் ஆகும்.
இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள், இந்த மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், நீதிமன்றம் உள்ளிட்ட பொறுப்புள்ள அமைப்புகள் நீதிக்காக குரல்கொடுக்க வேண்டும்.
மாடுகளில் உரிமைக்காக குரல்கொடுக்க மாபெரும் கும்பல் உள்ள நாட்டில், குழந்தைகள் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வாருங்கள்.
(குறிப்பு: முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்.) என முக நுால் பக்கத்தில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.