முரளிதரனும், விஜய்சேதுபதியும்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னைநாள் வீரரும், உலகத்தில் பெயர்பெற்ற சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா-முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை 800எனும் திரைக்காவியமாக படைக்கவுள்ள நிலையில் அப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக முரளிதரன் பாத்திரமேற்று நடிக்கிறார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களூடாக விஜய்சேதுபதிக்கான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும்,இழிவுகரமான பதாதைகளையும் வெளியிட்டு பெரும்பாலான தமிழர்கள் இதனை சமகாலத்தில் எதிர்க்கின்றார்கள்.