முற்றவெளி நிகழ்வு குறிப்புகள் தமிழ் மக்கள் பேரவைக்கூட்டம்

 

ஆரம்பத்தில் பேரணிக்கு வந்த பொது மக்கள் உச்சி வெயில் காரணமாக மரநிழல்களில் ஒதுங்கியிருந்தனர்.பேரணி உள்நுழைந்ததும் அரைவாசி மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாது மைதானத்திற்கு வந்தனர் மேடையிலும் பந்தல் போடப்படவில்லை.இறுதிவரை மக்கள் பிரதிநிதிகளும் வைத்தியர்களும் வெயிலில் நின்றனர். தண்ணீர்போத்தல்கள் இயன்றவரை வழங்கப்பட்டு தாகம் தணிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அருமை,அனைத்து மக்களை இணைந்து பாடுமாறு கேட்கப்பட்டது மாற்றத்திற்கான அறிகுறி. சிங்களமக்கள் ,ஆட்சியாளர்கள் இப்பிரகடனம் எதிரானது அல்ல,என்னும்போது அமைதியாக இருந்த மக்கள் இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிரானதல்ல என முதலமைச்சர் பேசும்போது மைதானம் அதிர்ந்து.

இன்று மட்டும் எள்எண்ணை எரிக்கமுடியும் என்று முன்னாள் பா.உ சுரேஸ் பேசும் போதும் அதிர்ந்து.

கஜேந்திரகுமாரை பேச அழைக்கும்போதும் ஆர்பரித்தனர்.

வடக்கு கிழக்கு இணைக்கபடவேண்டும் என கிழக்கு மாகாணிணைத்தலைவர் வசந்தகுமார் பேசும்போது ஆர்ப்பரித்தனர்.

பேச்சுகள் முடிவில் எழுக தமிழ் கோசம் எழுப்பப்பட்டது.முதல்வர் மூன்று முறையுடன் நிறுத்த சுரேஸ் தொடர்ந்து 21 முறை அறைகூவினார்.

அரச ஊழியர்கள் அதிகளவு பங்குபற்றியிருந்தனர் குறிப்பாக தீவு ரீதியான பதவிநிலை அலுவலர்கள் சாதாரண பொதுமக்களாக இணைந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தனர்.வைத்தியர்கள் சட்டதரணிகள் போல அரசியலில் ஈடுபடாத பல அரச ஊழியர்களையும் காணக்கூடியதாக இருந்தது.

பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட தமிழரசுக்கட்சியை சேர்ந்த பலமுதியவர்களை பங்குபற்றி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
முஸ்லீம்களை மருந்துக்கும் காணமுடியவில்லை

எதிர்காலத்தில் இந்நிகழ்வுகளை

மாலை நேரத்தில் நடத்தபடுவதுடன்
வெளிமாவட்டத்தினருக்கு உணவு ஒழுங்குபடுத்துதல்
வர்த்தக மையங்களை காலையில் செயற்பட அனுமதித்தல் போன்ற மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

(Satheeshvaran Parakiramasingam)