‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யை அர்த்தபுஷ்டியுடன் புகட்ட வேண்டும்

கடந்த 12 வருடங்களாக, மே மாதம் 18ஆம் திகதி, ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்’ ஈகைச் சுடரேற்றி நினைவுகூரப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் வந்துபோகும் நத்தார், புதுவருடம், தைப்பொங்கல், சித்திரைப்புத்தாண்டு, தீபாவளி, ஊர்க் கோவில் திருவிழா போன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் கடமையாகவோ, சடங்காகவோ, முகத்தைக் காட்டும் நிகழ்வாகவோ கருதிவிடக் கூடாது.