யார் குற்றவாளிகள்

வங்கி மோசடிகள் என்பவை மிகவும் ஒரு சாதாரண விசயங்களாக யாழ்ப்பாண தமிழர்களின் கலாச்சாரமாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.ஆரம்ப காலங்களில் சமூக நலக் கொடுப்பனவு நிதிகளில் தொடங்கி கள்ள பாஸ்போர்ட் சீட்டு என ஆரம்பித்து இது பாரிய மோசடிகளாக வளர்ந்துவிட்டது. இது கனடாவில் தொடங்கியதல்ல.யாழ்ப்பாண தமிழர்களிடம் தொடங்கிய லஞ்சம் அவர்கள் உலகம் முழுவதும் பரவ அது பல்வேறு வடிவங்களாக பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது.போதைப் பொருட்கள் கடத்தலும் இதற்குள் அடங்கும்.இந்த விசயங்களுக்காக யாழ்ப்பாண தமிழ் சமூகம் ஒரு போதும் வெட்கப்பட்டதில்லை.வருந்தியதும் இல்லை.


நாட்டிலே ஊழல் செய்தவர்கள் லஞ்சம் வாங்கியவர்கள் எல்லாம் புலம் பெயர் தேசத்தில் பெரிய மனிதர்களாக அறிவாளிகளாக கௌரவிக்கப்படுகின்றனர்.மதம் மொழி என்பன கூட பணம் சம்பாதிக்கவே பயன்படுத்தப்படுகிறது.இதுவும் ஒரு வகையான மோசடிகள்தான்.
இன்று சஞ்சய் சுகன்யா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மட்டுமே குற்றவாளிகளா?இவர்களைப் போல் எத்தனை பேர் உலாவருகிறார்கள்.சிலர் இந்த மோசடிகளை வைத்தே அஅடைமொழிக்குரிய பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
எத்தனை தமிழர்களில் வீடுகளில் இருக்கும் ஆடம்பரப் பொருட்களுக்கு ரசீது வைத்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சொந்தக்காசில் பெற்றோல் அடிக்கிறார்கள்?இவர்களை தமிழர்களாகிய நாங்களே அஅவர்களை பயன்படுத்திவிட்டு இன்று அவர்களைப் பற்றி நாங்களே ஏதோ அறியாத இரகசியம்போல புதினங்கள் போல பேசுவது வேடிக்கையாக உள்ளது.
இதைவிட இன்சூரன்ஸ் தரகர்கள் பண்ணும் மோசடிகள் எத்தனை? வாடிக்கையாளர்களை ஏமாற்றும் இன்சூரன்ஸ் தரகர்களை என்னவென்பது? இவர்களை பயன்படுத்தி எத்தனை வீடு கார் உரிமையாளர்கள் பணம் சம்பாதித்துள்ளனர் வீடுகளை திட்டமிட்டு எரிப்பது திட்டமிட்டு திருடுவது திருட வைப்பது எல்லாம் புதுக் கதைகளா? .இவை நாங்கள் அறியாத இரகசியங்களா?
படித்தவர்களே அப்பாவிகளை மூளைச் சலவை செய்து இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடுத்துகின்றனர்.
குற்றவாளிகளை பயன்படுத்தி ஊக்குவித்துவிட்டு இன்று அவர்களை குற்றவாளிகள் என்கிறோம்.என்ன அநியாயம்.
சுட்டும் விரலால் எதிரியை காட்டிக்
குற்றம் கூறுகையில் மற்றும்
மூன்று விரல்கள் உந்தன்
மார்பினைக் காட்டுதடா.

(Vijaya Baskaran)