யாழில் தோன்றியுள்ள வாள் வெட்டு…. வாய் வெட்டுக் குழுகள்….!

கிறீஸ் பேய் -வாழ்வீச்சுக்காரர்கள் போதை வஸ்து வரை சமூகத்தை சீரழிப்பதற்கென்றே தலை நிமிர்ந்து நிற்பதற்கான சீராக வளர்ச்சி பெறுவதற்கான நிலைமைகளை இல்லாமல்செய்வதற்கான தீய எண்ணம் கொண்ட சக்திகளின் சதியின் அங்கமோ என நியாயமான சந்தேகம் எழுகிறது.

பாகிஸ்தானில் போன்று வெவ்வேறு அதிகாரக் குழுக்கள் செயற்படுகின்றனவா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
30 ஆண்டுகால ஈவிரக்கமற்ற வன்முறையின் நீட்சி.
தவிர புலம்பெயர் உறவுகளின் உதவிகளால் உருவான உதாரித்தனம்
நவதாராளவாத உலகின் நுகர்வு கலாச்சாரம்
தமிழ் சினிமா கதாநாயகனின் வன்முறை விம்பம். கல்வியில் கரிசனை அற்ற தொழில் செய்ய விரும்பாத வெட்டியான கும்பலக்ளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த கும்பல்கள் தாம் சமூக கலாச்சாரக்காவலர்கள் -வாள் வீச்சு உரிமை கோரல் என்று அனாமதேய கடதாசித்துண்டுகளை வெளியிடத்தொடங்கியுள்ளன.
மத்திய மாகாண அரசாங்கங்களின் கையாலாகாத நிலையில் நீதிமன்றம் இந்த அராஜகத்தை கட்டுப்படுத்த தனது இயலுமானவரை முயற்சித்தது.

இந்த கும்பல்களுக்கு சமூக பிரக்ஞை இருப்பதாக திரை மறைவு தீய சக்திகள்?? காட்ட முனைவது முழு சமூகத்தையும் சீரழித்து அராஜக நிலையை தோற்றுவிப்பதற்கே. பட்ட துன்பத்திற்கு இப்போது சிறிது மூச்சுவிடக் கூடிய நிலை. சமூகத்தை பீதியின் நிழலில் வைத்திருக்கும் இந்த கும்பல்களின் அட்டகாசங்களுக்கும் அதன் பின்னணிகளுக்கும் விரைவாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

(Sritharan Thirunavukarsu)