யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சி நடைபெறுவது புலிப்பினாமிகளுக்கும் அவர்களோடு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கும் வேப்பங்காயாக கசக்கிறது. வடகிழக்கில் அமைதி இல்லை, சுமூகமான சூழல் இல்லை. தமிழர்களுக்குச் சுதந்திரம் இல்லை.தமிழர்களை இலங்கை அரசு சித்திரவதை செய்கிறது என்றேல்லாம் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சி வடக்கில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது இவர்களின் பிரச்சாரத்தைப் பொய்யாக்குகிறது.

புலிகள் வன்னியில் இருந்த காலத்தில் இப்படியான மாபெரும் இசைநிகழ்ச்சி நடைபெற வாய்ப்பே இருக்கவில்லை. புலிகள் வன்னியைக் கட்டுப்பபட்டில் வைத்திருந்தாலும் அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லலத பகுதிகளில்கூட புலிகளின் உத்தரவை மீறி தமிழர்கள் சுதந்திரமாக எதையும் செய்துவிட முடியாது.

புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளிலெல்லாம் புலிகள் தமிழர்களிடம் வரி அறவிட்டனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கப்பல் மூலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ செல்பவர்கள் எந்த வர்த்தகப் பொருட்களையும் எடுத்துச் செல்ல முடியாது.

தரை மார்க்கமாக குடாநாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கும் புலிகல் வரி அறவிட்டனர். கொழும்பிலிருந்து கப்பல் மூலமாக காங்கேசன்துறைக்கு இறக்கப்படும் பொருட்களின் விபரங்கள் புலிகளுக்கு இலகுவாகத் தெரிந்துவிடும். காரணம் புலிகளின் உளவாளிகள் எல்லா இடங்களிலும் வேலை செய்தனர்.

கோண்டாவில் சிவகாமி அம்மன் ஆலயத்தில் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் புதல்வன் செல்வகுமாரின் இசைநிகழ்ச்சி நடைபெற இருந்தபோது புலிகள் தலையிட்டு 10 லட்சம்ரூபாய் செலுத்திவிட்டு நிகழ்ச்சியை நடத்தும்படி உத்தரவிட்டனர். அதனால் அந்த இசைநிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டார்கள். இப்படிப்பட்ட அன்றைய சூழலில் புலிகளின் பாடகர்களான “தேனிசை செல்லப்பா” புஷ்பவனம் சுப்புசாமி ஆகியோரின் இசை நிகழ்ச்சியை நடத்திவிடலாம். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசைநிகழ்ச்சியை நடத்திவிட முடியுமா?

புலிகள் அழிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் காலத்தில் இருந்த லங்காசிறி போன்ற புலிகளின் ஊடகங்கள் அதே நிலையில்தான் இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூத்தாடி எனவும் இன்னும் கேவலமான முறையிலும் புலிகளின் இணையதளம் ஒன்று விமர்சித்துள்ளது.

புலிகளுக்காக புரட்சிப் பாடல்களைப் பாடிய பாடகர்களெல்லாம் இப்போது பணத்துக்காக குத்தாட்டம் போடுகிறார்களாம்.

இந்த விஞ்ஞானம் புரியவேயில்லை! 2009ம் ஆண்டு மே மாதம் புலிகள் அழிக்கப்பட்டு நாட்டில் சகஜ நிலை திரும்பியபின் :

தேனிசை செல்லப்பாவைக் கூப்பிட்டு
மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை”, நாங்கள் மட்டும் உலகத்திலை நாடு திரும்ப முடியவில்லை!

எங்கள் தலைவன் பிரபாகரன் முருகக் கடவுளுக்கு நிகரானவன் என்று பாட முடியுமா?

அல்லது புஷ்பவனம் சுப்புசாமியைக் கூப்பிட்டு ஓடுதம்மா தமிழீழத்தில் கண்ணீர் ஆறு என்று பாட முடியுமா?

வெளிநாடுகளில் பிரசா உரிமை பெற்றவர்கள் எல்லோரும் இலங்கையில் எல்லாப் பாகத்திலும் நிற்கிறார்கள். இப்போது யார் நாடு திரும்ப முடியவில்லை என்று பாட முடியும்?

மகிந்த ஆட்சிக்காலத்தில் பெரிய இசை நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிலுள்ள புலிப்பினாமிகளால் தடுத்து நிறுத்தபட்டது. மகிந்த அரசுதான் நாட்டில் பிரச்சனை இல்லை என்று காட்ட இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கிறது என்று பிரச்சாரம் செய்தார்கள்.

இப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சியை இந்திய அரசுதான் ஒழுங்கு செய்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த இசைநிகழ்ச்சிக்கான கட்டணம் அதிகமானது என்பது ஒத்துக்கொள்ள வேண்டியதுதான். காரணம் சாதாரண எழை மக்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தி நிகழ்ச்சியைப் பார்க்க முடியாது. கனடாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கான கட்டணத்தைவிட யாழ்ப்பாணத்தில் நடைபெறு இசை நிகழ்ச்சியின் கட்டணம் அதிகமாகவே உள்ளது,

இந்த இசை நிகழ்ச்சியை நடத்துவர் மலையகத் தமிழர் என்று தரம் பிரித்துக் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் வருடம் முழுவதும் இசைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புலிப்பினாமிகளின் ஆதரவுடனேயே சகல இசைநிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சமீபத்திலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ஐம்பதாவது வருட பூர்த்தி விழா இலங்கைத் தமிழர்களாலேயே ஸ்கார்புரோவில் நடைபெற்றது. வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் போல வடகிழக்கில் நடைபெறும்போது மட்டும் இவர்கள் ஏன் காண்டம் கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதன்முலம் தங்கள் தமிழர்கள் சம்பந்தமாகச் சொல்லப்படும் பொய்கள் நிரூபணமாகிவிடும் என்பதே இந்தக் கூட்டத்தின் பிரச்சனை.

(Rahu Rahu Kathiravelu)