யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு

(Maniam Shanmugam)
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைய வேண்டும் என்பது வடக்கு வாழ் தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாகும். ஆனால் அந்தக் கோரிக்கை 1975ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசினால்தான் நிiவேற்றி வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றுவதற்காக நடத்தப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தில் ஒரு அணிலைப் போல ஒரு சிறு துரும்பை என்னாலும் தூக்கிப்போட முடிந்தமைக்காக பெருமைப்படுகின்றேன்.