ராஜீவ்காந்தி கொலை பிரபாகரனின் தனிப்பட்ட பழிவாங்கல்

அன்ரன் பாலசிங்கம் ராஜதந்திரியும் அல்ல அரசியல் ஆலோசகரும் அல்ல. அவர் வெறும் பேச்சாளர். பூட்டான் பேச்சுவார்த்தையின்போது பாலா அண்ணை நான் சொல்லுறதை சொல்லிறதுக்குதான் நீ இருக்கிறாய் என்று பிரபாகரன் பாலசிங்கத்தை எச்சரித்தார். அங்கே ஏனைய இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இருந்தார்கள். ராஜீவ்காந்தி கொலை பிரபாகரனின் தனிப்பட்ட பழிவாங்கல். பிரபாகரனை ஹெலிகொப்டரில் அழைத்துச் சென்று டெல்லியில் வீட்டுக்காவலில் வைத்தபோதே ராஜீவ்காந்திக்கு பாடம் படிப்பிக்காமல் விடமாட்டேன் என்று பிரபாகரன் அன்ரன் பாலசிங்கத்திடம் கூறினார். தன்னை யாரும் கட்டுப்படுத்தவோ நிர்ப்பந்திக்கவோ முடியாது என்பது பிரபாகரனின் கொள்கை.

இந்தியப்படையுடன் யுத்தம் ஆரம்பிக்கக் காரணம் தமக்கு செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே! யுத்தம் ஆரம்பித்தவுடன் அன்ரன் பாலசிங்கம் படகேறி இந்தியா சென்றுவிட்டார். இந்தியா செல்லும் போது பிரபாகரன் ஒரு விசரன், வீணாக இந்தியாவுடன் யுத்தம் ஆரம்பித்துவிட்டான் என்று திட்டிக்கொண்டே சென்றார்.

புலிகள் இயக்கம் ஒரு சூனியமான இயக்கம். புலிகளின் மேல்மட்ட நடவடிக்கைகள் கீழ் மட்ட உறுப்பினர்களுக்குத் தெரியாது. ராஜீவ்காந்திமேல் கை வைக்க வேண்டாம் என்று பாலசிங்கம் கூறியும் பிரபாகரன் கேட்கவில்லை. கருணா ,கே,பி மற்றும் மேல்மட்ட உறுப்பினர்கள் எவர்க்கும் பிரபாகரனும் பொட்டம்மானும் தீட்டும் திட்டங்கள் தெரியாது.

அன்ரன் பாலசிங்கத்துக்கு புலிகளிடமிருந்து பெருமளவு ஊதியம் கிடைத்தது. ஆடம்பர வசதி வாய்ப்புக்கள் ,பாதுகாப்புகள் இருந்தது. அதனால் அவர் புலிகளை விட்டு விலகவில்லை. நோர்வேக்கு பாலசிங்கமும் , கருணாவும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற போது பாலசிங்கண்ணை பேச்சுவார்த்தையை இன்னும் அஞ்சு வருசத்துக்கு இழுத்தடிக்க வேணும் என்று பிரபாகரன் பாலசிங்கத்திடம் சொல்லிவிட்டதை பாலசிங்கம் கருணாவிடம் கூறினார். அந்த இரகசியம் கருணாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. பாலசிங்கம் அப்படிக் கூறியபோது கருணா ஆச்சரியமடைந்தார்.
சமாதானப் பேச்சுவார்த்தை பிரபாகரனின் வெறு கண்துடைப்பு நாடகம் என்பதைக் கருணா புரிந்துகொண்டார்.

யுத்தத்தால் பெரும் இழப்புக்களையும் அழிவுகளையுமே சந்தித்திப்பதால் சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் யுத்தம் முடிவுக்கு வரும் என கருணா நம்பினார். கருணா மட்டுமல்ல புலிகளின் மேல்மட்ட உறுப்பினர்களுக்கும், கீழ்மட்ட உறுப்பினர்களுக்கும் யுத்தம் தொடருவதில் விருப்பம் இருக்கவில்லை. அதன் காரணமாக சமாதானத்துக்க்கான பரிசீலனையில் பாலசிங்கம் கையொப்பமிட்டார். கையொப்பமிட்ட பாலசிங்கம், பிரபாகரனுக்குப் பயந்து பிரித்தானியாவுக்குத் திரும்பிவிட்டார். வன்னி திரும்பிய கருணா சமாதான ஒப்பந்தத்துக்கு கையொப்பமிட்டதன் காரணத்தால் பிரபாகரனின் கொலை அச்சுறுத்தல் காரணமாக புலிகள் இயக்கத்திலிருந்து பிரியவேண்டி ஏற்பட்டது.

பாலசிங்கம் ஏன் இறுதிவரை இலண்டனில் இருந்தார்? புலிகளின் ஒரு அரசியல் ஆலோசகர், ராஜதந்திரி என்று சொல்லப்படுபவர் ஏன் வன்னியில் இருக்காமல் பிரித்தானியாவில் இருந்தார்? அவருக்கு நீரிழிவு நோய், இன்னும் பல வியாதிகள் வைத்திய வசதிக்காக பிரித்தனியாவில் இருந்தார் என்று சிலர் கூறக்கூடும். அன்ரன் பாலசிங்கத்தைத்தவிட பிரபாகரனுக்குத்தான் அதிகம் நோய்கள் இருந்தன, பிரபாகரனுக்கு ஏற்படுத்திக்கொடுத்தது போல வைத்திய வசதி அன்ரன் பாலசிங்கத்திற்கு ஏற்படுத்திக்கொடுக்க முடியாதென்றல்ல. அவ்வளவு பணவசதி படைத்தவர்கள் புலிகள்..

அன்ரன் பாலசிங்கம் தன்னுடைய பாதுகாப்பு விசயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். பிரபாகரனால் தனக்கு உயிராபத்து வரும் என்று அவருக்குத் தெரியும். புலிகளின் மேல்மட்டத் தளபதிகள் பிரபாகரனின் கூட இருந்தே குழி பறிக்கும் சதியினால் கொல்லப்பட்ட உண்மைகள் அவருக்குத் தெரியும். தனக்கும் பிரபாகரனின் ஆழ ஊடுருவும் படையணி வேலையைக் காட்டலாம். பழியை அரசாங்கத்தின்மேல் போட்டு பிரபாகரன் மேலும் அனுதாபத்தைத் தேடுவார். என்பதெல்லாம் பாலசிங்கம் அனுபவத்தில் கண்டவை. அதனால் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உதவியுடன் அவ்வப்போது வன்னிக்குச் சென்றுவந்தார்.

ராஜீவ்காந்தி கொலை பிரபாகரனும் ,பொட்டம்மானும் இரகசியமான முறையில் நடத்தப்பட்டதொன்றாகும். அந்தக் கொலை சில மேற்குலக நாடுகளுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்ததென்பது உண்மையாகும். அன்றைய இலங்கை அரசுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ராஜீவ்காந்தி கொலை. அதற்கு முன்னரே இந்தியப் படைகளுடன் மோதி புலிகள் ஐக்கிய தேசியக் கட்சி அரசை மகிழ்வித்தனர். ஐக்கிய தேசியக்கட்சி மட்டுமல்ல ஜேவிபி இயக்கத்துக்குக் கூட புலிகள் இந்தியப் படையுடன் மோதியது, ராஜீவ்காந்தியைக் கொலை செய்ததும் மகிழ்வான விடயம். ஆசியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக ராஜீவ்காந்தி இருந்தார்.

புலிகள் ஒரு ராஜதந்திர அணியாகவோ, அல்லது அரசியல் ஆளுமை மிக்க அணியாகவோ வளரவில்லை. வெறும் கொலை இயந்திரங்களாகவே செயற்பட்டனர். அதுதான் அவர்கள் தாங்களாகவே அழிந்துபோகக் காரணம். கருணாவிடம் போர்த்திறமை இருந்தது. அதுபோல தீர்க்கதரிசனமும் இருந்தது.. அதுதான் அவர் இன்று உயிரோடு இருக்கக் காரணம். இல்லையென்றால் அவருடைய உடலும் முள்ளிவாய்க்காலில் நடேசனுக்கு அருகில் கருகிப்போய் இருந்திருக்கும்.

(Rahu Rahu Kathiravelu)