வடு

(ஜெரா)

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர். அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார்.