வட மாகாணசபையின் அஸ்தமனம்

இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களிலும் மிகப் பின்தங்கியிருப்பது வடமாகாணமே. அதிலும் வன்னி மாவட்டங்களின் நிலை இன்னும் மோசமான நிலையிலே உள்ளது. இதையிட்ட அக்கறையை வடமாகாணசபை கொள்ளவில்லை என்பது கண்டனத்துக்குரியது.

வடமாகாணசபையின் கல்வி அமைச்சர்களாக திரு. த.குருகுலராஜா இரண்டு ஆண்டுகளாகவும் திரு. க. சர்வேஸ்வரன் இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்திருக்கின்றனர். சர்வேஸ்வரன் தற்போதும் அமைச்சராக உள்ளார்.

எனினும் வடக்கின் கல்விக்கோ வன்னியின் கல்வி மேம்பாட்டுக்கோ உரிய நடவடிக்கைகள் எதையும் இரண்டு பேருமே உருப்படியாகச் செய்யவில்லை. பெருமளவு பணச்செலவோடு ஆசிரிய மாநாடுகளை திருவிழாப்போலச் செய்து களித்தார் குருகுலராஜா. கல்வி மேம்பாட்டுக்கு புதிய ஆலோசனைக் குழு என்ற பேரிலே எதையோ செய்யப்போவதாக அறிவித்தார் சர்வேஸ்வரன்.

ஆனால் யதார்த்த நிலை என்பது கீழுள்ள செய்தியில் நீங்கள் அறியக்கூடியதாக இருப்பதேயாகும்.

இது தனியொரு பாடசாலையிலோ பிரதேசத்திலோ உள்ள நிலைமை என்றில்லை. அநேகமான இடங்களில் இதுதான் நிலை. அதிபர் இல்லை. அல்லது பொருத்தமான அதிபரில்லை. ஆசிரிய வழங்கல்களில் முறைகேடு. முறையற்ற ஆசிரிய நியமனங்கள். கண்காணிப்பின்மை. வழிப்படுத்தல் கிடையாது எனப்பல.

இதையெல்லாம் கவனிக்க வேண்டிய தலைமைப்பொறுப்பிலுள்ள முதலமைச்சரோ இவற்றுக்கு வெகு தொலைவிலே உள்ளார்.

வாக்களிக்கப்பட்ட மக்களோ….!

(Karunakaran)