வதங்கிடுமே வாழைச்சேனை – பெருகிவரும் ஐஸ் தொழிற்சாலைகள்

(Je Tha)

மட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாசலில் அமைந்துள்ளது இந்த வாழைச்சேனை பட்டினம். நீர்வளமும் நில வளமும் மிக்க கல்குடா பிரதேசத்தின் மைய நகர் இதுவாகும். இங்கு நிறைந்து விளையும் வாழைத்தோட்டங்கள் காரணமாகவே இது வாழைச்சேனை எனப் பெயர் பெற்றது. இந்தக் கல்குடா தொகுதியானது பெருந்தலைவர் நல்லையா மற்றும் தேவநாயகம் போன்றோர் பிரநிநிதித்துவம் செய்த தொகுதியாகும். அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் சந்திரகாந்தன் கூட இந்த தொகுதியின் பிரதிநிதியாகவே அரசியலில் காலடி பதித்தார்.