வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி

(Arun Ambalavanar)
வரதராஜப்பெருமாள் என் மதிப்புக்குரிய போராளி-அரசியல்வாதிகளில் ஒருவர். ஒரு புத்திஜீவி. மிகவும் வறிய குடும்பப்பின்னணியிலிருந்து வந்து சுய படிப்பாலும் சுய முயற்சியாலும் முன்னேறி பல்கலைக்கழக விரிவுரையாளராகி முதல் ஈழத்தமிழரசின் நிறைவேற்று அதிகாரி- முதலமைச்சராக வந்த அவர் கதை ஒரு Fairy Tale ஸ்ரோறி . அவர் ஒரு போராளி இராணுவத்தளபதி அல்ல. அவர்கைகளில் இந்தியப்படைக்காலத்தில் ரத்தம் உண்டான குற்றச்சாட்டுக்களும் இல்லை. தன் பல்கலைக்கழககாலத்தில் சுயமாக ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் வாசித்து ஏட்டுச்சுரைக்காய் மார்க்சியத்தின் குறைபாடுகளை அறிந்தவர். பின் இந்திய வனவாச காலத்தில் ஆங்கிலத்தில் சட்டம் படித்தவர். புலிகள் எல்லா தமிழ் இயக்கங்களையும் “வைபோசாக” கூட்டமைப்புக்குள் கொண்டுவர அதை மறுத்து கொள்கை குன்றாக நின்றவர்.