வரலாறு எம்மை விடுதலை செய்யும்

வரலாறு விடுதலை செய்யும் என்ற பிடல் காஸ்ரோவின் வாக்கு இற்கு அமைய இன்று ஈழவிடுதலைக்காக போராடி தம்மை அர்பணித்த ரெலோ போராளிகளை மக்கள் தம்முடன் இணைத்துள்ளனர். வரலாறு இந்தப் போராளிகளை விடுதலை செய்து விட்டது. இந்த கொடும் செயலுக்கு மூல காரணமான புலிகளை வரலாறு என்றும் விடுதலை செய்யப் போவது இல்லை அது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து மண்டியிட்டபோதும். இதனை வரலாறு எழுதிவிட்டும் சென்றிருக்கின்றது.

புலிகளினால் ரெலோஅமைப்பு ஆயுத ரீதியாக ஒடுக்கப்பட்டு இதன் பல போராளிகளும் கொலை செய்யப்பட்டனர் 1986 மே மாதம் 6ம் நாள் மதியம் 12 மணிக்கு சற்று முன்பு இல் இறுதியாக ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம் இறுதி நேரக் காப்பாற்றுவதற்குரிய சந்தர்பத்திலிருந்து நூலிளையில் தவறி புலிகளால் கொல்லப்பட்டார் இந்தச் சம்பவங்களை கண்டித்து பத்மநாபா தலமையிலான ஈபிரேஎல்எவ் இனர் புலிகளின் ஆயுத அச்சுறுத்தல்களையும் மீறி தமது கண்டனத்தை பொதுமக்களை இணைத்து நடாத்தினர். இது நடைபெற்றது 1986 மே மாதம் 10ம் நாள் இதற்கான ஆவணங்களின் புகைப்படங்களை இங்கு காண்கின்றீர்கள்.

 
10.05.1986 காலை 11.30 மணியளவில் மானிப்பாய் மருதடிப் பிள்ளையர் கோயில் முன்றலில் இருந்து இவ் ஊர்வலம் ஆரம்பமாகி தாவடி ஊடாக காங்கேசன்துறை வீதி, ஸ்ரான்லி வீதி, மணிக்கூட்டு வீதி, மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன்துறை வீதி, கன்னாதிட்டி சந்தி ஊடாக  மாலை 2.30 மணியளவில் பெருமாள் கோவிலடியில் முடிவுற்றது. இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்ட அனைவர் வாயிலும் கருப்புத் துணிகளினால் கட்டப்பட்டடிருந்தது. ஐநுறுக்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.