வரலாற்று முரண்- துயர்

உலகம் முழுவதும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடம் இருந்து தீவிரமான கண்டனங்கள் எழுந்த காலத்தில1980 களின் நடுப்பகுதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் எது வித மனக் கிலேசமும் குற்ற உணர்ச்சியும் இன்றி தண்டனை வழங்கியவர் இன்று தமிழர்தலைவர்??
பயங்கரவாத தடைச்சட்டத்தின் மரணித்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் பெரும்பாலானோர் இலங்கை- இந்தியா உலகம் முழுவதும மனஅழுத்தங்களுடன் வாழ்கிறார்கள். அலைகிறார்கள். மனித உரிமை பற்றிய அவரின் போதனைகளும் ஆரவாரமும் தாங்க முடியவில்லை. , நாடகபாணி கபடத்தனம் என்பதில் பகுத்தறிவுள்ள ஜென்மங்கள் துளியளவு சந்தேகம் கொள்ளமாட்டார்கள். தமிழர் அரசியலும் மனித உரிமையும் அவருக்கு ஓய்வூதியகால பொழுது போக்கு. அவரை தமிழ் கடவுள் முருகனாக துதிக்கும் தமிழர்களின் மூடநம்பிக்கையை என்னென்று அழைப்பது???
“விதியே விதியே தமிழ் சாதியை என்செய நினைத்தாய்”- பாரதி