வலி ரணமானது

“வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே..”

“இங்லாந்து வாழ் தமிழ் நண்பர்களிடம் சொல்லிச்சென்றேன் உங்கள் நாட்டை பார்க்க போகிறேன் என்று. குடும்பத்துடன் சென்றேன் தனிமையில் வருகிறேன்.

என் மனதும் என் நினைவும் அவர்களாகவே இருக்கபோகிறது. இலங்கை வரும்போது விமான இருக்கை அருகே இன்பத்துடன் இருந்து கதைத்தவர்கள், இங்லாந்து திரும்பும் போது விமான இருக்கை வெறுமனே இருக்க வேதனைப்பட போகிறேன்….

என் நிலை அறிந்த சகோதரர்கள், நண்பர்கள் பெற்றோர்கள், விமானநிலையத்தில் காத்திருக்க அவர்களுக்கு என்ன சொல்வேன்! வீட்டின் உள்ளே செல்லும்போது அவர்களது உடமைகளும் அவர்களது காட்சிகளும் என் உணர்வை கொல்லப்போகுதே…

மனைவியின் அன்பு என்னை அழைக்காது பிள்ளைகளின் பாசம் என்னை அழைக்காது. என் தனிமை மட்டும் அவர்களின் அனைத்திலும் சிந்திக் கிடக்கப் போகிறதே..

என் பிள்ளைகளின் பள்ளி நண்பர்களுக்கு என் மனைவியின் சக தோழிகளுக்கு என்ன சொல்லப்போகிறேன்.

இனிவரும் காலத்தில் என் உயிர்களின் நினைவையும், அதன் வேதனையையும் மறக்க என் இருப்பிடத்தை மாற்றினாலும் அவர்கள் இறந்த இடத்தை நான் மறவேன்… 
நன்றி இலங்கை. #Srilanka #EasterSundayAttackLK

நன்றி முகப்புத்தகம் – manmathanbasky