வவுனிக்குளம் குடியேற்றம்

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் பல இடங்களில் குடியேற்ற திட்டங்கள் உருவாகின.இவை டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் திட்டமிட்ட இன விரிவாக்க நோக்கமாகவே உருவாகின.இதன் அடிப்படையில் வட பகுதிகளிலும் குடியேற்ற திட்டங்கள் உருவாகின.இதில் முதன்மையானது இரணைமடுஅவை ஆதாரமாக கொண்ட கிளிநொச்சி குடியேற்ற திட்டம்.இதை முன்னின்று செயற்படுத்தியவர் முன்னாள் சாவகச்சேரி பா.உ வே.குமாரசாமி அவர்களாவார்.

ஆனால் இந்த குடியேற்ற திட்டத்தில் வட இல்ங்கை வாழ் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.1960 வரை எல்லா இடங்களிலும் உயர்சாதியினரே குடியேற்றப்பட்டனர் .

1960 ஆண்டுகளில் வவுனிக்குளம் குடியேற்ற திட்டத்தில் முதன் முறையாக எமது ஊரவர்களுக்கு அதுவும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒரு பத்து குடும்பங்களுக்கு காணி வழங்கப்பட்டன.இதற்குக் காரணம் காலம் சென்ற தீண்டாமை இயக்கப் போராளி மந்துவில் இரத்தினம் அவர்களும் முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபை தலைவர் நடராசாவும் வி.என். நவரத்தினம் அவர்களுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே காணிகள் வழங்கப்பட்டன.

இந்த வட இலங்கை குடியேற்ற இடங்களில் பொதுவாக தீவுப்பிரதேச வாசிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது.இதில் மிகவும் முக்கியமானவர்கள் நெடுந்தீவு வாசிகள்.இவர்களோடு புங்குடுதீவு மக்களும் கைகோர்த்து நின்றனர்.இது நாளடைவில் பல இடங்களில் அடாவடித்தனங்களாகவே மாறிவிட்டன.

யாராவது காணிகளை திருத்தியபின் அத்துமீறி உரிமை கொண்டாடுவது முரட்டுவது எல்லாம் அவர்கள் பாசைகளாகிவிட்டன.இதன் காரணமாக பலர் குடியேற முடியாமல் திரும்பி கதைகள் பல உண்டு.

இவ்வாறான அட்டகாசங்கள் துணுக்காய் வவுனிக்குளம் பிரதேசங்களில் தீவுப் பிரதேசவாசிகள் அரங்கேற்றினார்கள்.தீவார் என்றால் எல்லா இடங்களிலும் மக்கள் பயந்தனர்.இவ்வாறாக ஒரு மோதல் ஒன்று வவுனிக்குளம் பகுதியில் நெடுந்தீவு மக்களுடன் எமது ஊரவர்களான மந்துவில் பிரதேச வாசிகளுடன் காணி விவகாரம் தொடர்பாக ஏற்பட்டது.அங்கே வெறுமனே பத்துகுடும்பங்கள் மட்டுமே இருந்ததால் மந்துவில் மக்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தனர்.

இதையும் சாதியையும் வைத்து நெடுந்தீவு வாசிகள் பலவீனமாக கருதினார்கள்.ஒரு நாள் எமது ஊரைச் சேர்ந்த சுந்தரம் என்பவரை வீடு புகுந்து கடத்திச் சென்றுவிட்டனர். எமது ஊரவர்கள் சற்று பயந்துவிட்டனர்.அதிஷ்டவசமாக அன்றையதினம் தீண்டாமை வெகுஜன இயக்கப் போராளி சிறீ ஜெயச்சந்திரன் தற்செயலாக அந்த ஊரில் நின்றார்.அப்போது ஒரு சிறுவன் வந்து இந்த தகவலை இன்னொரு போராளியான செல்லத்துரை என்பவரின் தம்பிக்கு வந்து சொன்னான்.

உடனே சிறீ ஜெயச்சந்திரனும் அவரும் துப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு நெடுந்தீவு மக்கள் வாழும் பகுதியை நோக்கி நடந்தனர்.இவரகளோடு நல்லவன் எனப்படும் இளைஞனும் இணைந்தான்.ஆனால் எமதுஊரவர்கள் அவர்களை பின் தொடர தயங்கினார்கள்.காரணம் பெருமளவிலான தீவுப்பகுதியினர் அங்கு வாழ்கின்றனர்.

எமது ஊரவர் வாழும் பகுதியில் எல்லா இளைஞர்களும் கூட்டமாகநின்றனர்.அப்போது மல்லாவியில் வாழ்ந்து வந்த தீண்டாமை வெகுஜன இயக்கப் போராளி ( இவர்தான் தவராசனுக்கு முடிவு கட்டியவர்) வானில் வந்துஇறங்கினார்.அப்போது விசயத்தை சொல்ல அவர்கள் அவங்கள் போகவிட்டு நீங்கள் வேடிக்கை பார்கிறீர்களா என கோபமாக பேசிவிட்டு அதே வானில் ஏறி அந்த பகுதியை நோக்கி விரைந்தார்.அதைத் தொடர்ந்து எல்லா இளைஞர்களும் தீவுப்பகுதியினர் வாழும் பகுதியை நோக்கி நடந்தனர்.இவர்கள் தொகை குறைவு அவர்களோ நூறுக்கும் அதிகம்.
சிறி ஜெயச்சந்திரன் செல்லத்துரையை சற்று தள்ளி நிற்கவிட்டு அவர்களை நோக்கி போனார்.பிடித்தவரை விடவேண்டும் எனக் கேட்டார்.அவர்களும் பயந்தே உடனே விட்டனர்.உடனே அவரை பின் நகர்த்திவிட்டு கொத்தியவர்தான் யார் அவர்கள் முன்னால் வரவேண்டும் என்றார்.அவர்களும் வந்தபின் இனிமேல் எங்களுடன் விளையாட வேண்டாம் என எச்சரித்துவிட்டு திரும்பினார்

இதற்கிடையில் அவர்கள் பயந்ததை உணர்ந்ததை அறிந்த வெட்டி சண்டியர்கள் கடத்தியவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர்.அவர்களை சிறீ ஜெயச்சந்திரன் தடுத்தார்.அவர்கள் கேட்கவில்லை.உடனே செல்லத்துரை தாக்கியவர்களை அடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

அதன் பின்பு நெடுந்தீவு வாசிகள் தாக்கலாம் என்ற முன் எச்சரிக்கையோடு எமது ஊரவர்கள் இருந்தார்கள்.ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை.இதைத் தொடர்ந்து பல ஊரவர்களும் சாதிபேதமின்றி மந்துவில் கிராம வாசிகளை ஆதரித்தனர்.அதன் பின்பு தீவுப்பகுதியினர் அட்டகாசங்கள் முடிவுக்கு வந்தது.

சில காலங்களின் பின்பு தலை எடுத்தனர்.அவர்களை முன்னாள் புளொட் பொறுப்பாளர்களாக முல்லைத்தீவு,கிளிநொச்சி பகுதிகளில் பணியாற்றிய தாமரைக்கோன், நந்தன் ஆகியோர் கட்டுப்படுத்தினர்கள்.

இந்த தீவுப்பகுதியினரின் அத்துமீறல் கிழக்கில் சில சிங்கள குடியேற்றவாசிகளின் செயற்பாட்டைஒத்தது.இவை பொய் எனில் குடியேற்ற பிரதேசத்தில் வாழ்ந்த மக்களைக் கேட்கலாம்.

(Vijay Baskaran)