வாய்வீர ஐயனே

புலிவாலில் தொங்குவதிலோ, ஏன் வெறும் புலி எதிர்ப்பிலோ எங்கள் அடையாளம் இல்லை. உங்களைப் போன்றவர்களுக்கு புலி என்ற முகமூடியைக் கழற்றினால் எந்த தனித்துவமான அடையாளமும் கிடையாது. நாலு பேரைச் சிந்திக்க வைக்கக் கூடிய கருத்துக்களைச் சொல்வதற்கான சிந்தனை வளமும் கிடையாது. உங்களால் முடிந்ததெல்லாம் மந்தைக் கூட்டத்தின் லைக்குகளுக்காக படம் போடுவதும் காட்டுவதும் மட்டுமே!

ஊரில் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போய் யுத்தம் செய்த புலிகள் உங்களைப் போன்ற வெளிநாட்டு பக்தர்களின் பிள்ளைகளை ஊருக்கு அழைத்து துவக்கோடு செல்பி எடுக்க வைத்து புல்லரிக்க வைத்தது எங்களுக்கும் தெரியும். இப்படியாக போய் வந்து, அமெரிக்காவில் ஏவுகணை வாங்கப் போய் மாட்டிக் கொண்டு புலிவால்களால் கைகழுவப்பட்டு வாழ்வை இழந்த கனடாப் பையனையும் தெரியும்.

இவ்வளவு வாய்வீரம் காட்டும் நீங்கள் முடிந்தால் வன்னியிலே இருந்து போராடாமல் இங்கே வந்து எதற்கையா பொங்கி கொத்துரொட்டி விழா நடத்துகிறீர்கள்? வன்னியில் நின்று உங்கள் தலைவர் பெருமானையாவது காப்பாற்றியிருக்கலாமே?

(தாயகம் வெளிவந்தது 89ல். அப்போது உங்கள் வயது என்ன என்பதை சொன்னால் உங்கள் அரசியல் முதிர்ச்சி பற்றி நாங்களும் அறிந்து கொள்ளலாம்!)

நமது பதிவு ஒன்றுக்கு பின்னூட்டம் விட்ட புலி அடையாளப் பிரகிருதி ஒருவருக்கான பதில்!

(George R C)