விடுதலை விரும்பிகளில் சாவாரி செய்யும் ஒட்டு குழுக்கள்!

தமிழீழ விடுதலை போராட்டவாரலாற்றில்,விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ‘ஒட்டுக்குழுக்கள்’. இதை ஆங்கிலத்தில் Paramilitary எனகூறுவார்கள். இதனது வரவிலக்கணம் அல்லது அதன் பொருளை ஆராயுமிடத்து சில சங்கடமான விடயங்கள் வெளியாகின்றன. அவற்றை வடக்கு கிழக்கு வாழ் தமிழீழ மக்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்பதில் எமக்கு ஐயமுமில்லை. ஆகையால் அதனது விளக்கத்தை மிகவும் சுருக்கமாக தருகிறேன். ஓட்டு குழுக்கள் – கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அடிப்படை தந்துவங்களுக்கு அப்பால் சுயகௌரவம் அற்று,சந்தர்ப்பவாத வாழ்க்கை நடந்துபவர்கள் என வரவிலக்கணம் சுட்டி காட்டுகிறது. இவர்கள் பணம், பதவி, ஆசை, காமம் ஆகியவற்றிற்கு அடிமையானர்வர்களென அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

கடந்த காலங்களில் வேறுபட்ட கருத்துகளில் நூற்றுக்கணக்கான ஆய்வு கட்டுரைகள் எழுதியிருந்த பொழுதும், இம் முறை ‘ஒட்டுக்குழுக்கள்’பற்றி எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர், எனக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு கொடுத்தவர். ஆகையால் இவ் பெயர்வழிக்கு அவர்களது தோழர்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளார்கள். தமிழ் ஒட்டுக்குழுக்கள், தமிழீழ விடுதலை விடுதலைக்கான ஆயுத போராட்ட வேளையில், சிறிலங்கா அரசு, இராணுவம் மற்றும் அவர்களது புலனாய்வு பிரிவினருடன் இணைந்து, 2009ம் ஆண்டு மே மாதம் ஆயுத போராட்டம் மௌனிக்கும் வரை துணை போனவர்கள். இதை வேறு வடிவில் கூறுவதனால், தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத போராட்டத்தை மேற்கொண்ட வேளையில், பாரளுமன்ற அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அயாராது உழைத்தனர்.

இவற்றை இனவாத சிறிலங்கா அரசுடன் இணைந்து எதிர்த்தவர்களும், வெற்றி நடை போட்ட ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு துணை போனவர்களும் ஒட்டு குழுவினரே. போர் முடிவிற்கு வந்த பின்னர், தமிழீழ புலிகளை அழிப்பதற்கு தாங்களும் பெரும் பங்கு வகித்ததாக அறிக்கை வெளியிட்டவர்கள் புளோட் அமைப்பினர். ஒட்டு குழுக்களுக்குள் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு எதிராக இருவிதமாக இயங்கினார்கள்,இயங்குகிறார்கள். ஒன்று, தமது அரசியல் உரிமை, இன, கலை, கலாச்சார, பண்புகளை – பணம், பதவி,ஆசை, காம இச்சை, சுய கௌரவ போன்றவற்றிற்கு அடைவு வைத்துவிட்டு,நாட்டில் நடந்து கொண்டடிருந்த ஆயுத போராட்டத்தை அழிப்பதற்கு துணை போனவர்கள். மற்றைய பகுதியினர், புலம் பெயர் தேசங்களில், சிறிலங்காவின் வெளிநாட்டு தூதுவரலாயத்திலிருந்து சேவை செய்த சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து நாசகார வேலைகளை செய்தவர்கள்.

இப் பிரிவினர், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு புலம் பெயர் தேசங்களில் பலம் சேர்த்த தமிழீழ செயற்பாட்டாளர்களிற்கு சொல்லான துன்பங்களையும், இம்சைகளையும் கொடுத்தவர்கள். ஒட்டு குழுவை சார்ந்த இப் பிரிவினர், சிறிலங்க புலனாய்வினருடன் மிக நெருக்கமாக இணைந்து குடி, கும்மாளம், விருந்து என கூத்தாடியவர்கள். தமிழீழ விடுதலை போராட்டத்தினை வெற்றிகரமாக அழித்த ஒட்டுக்குழுவினர், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின்ஆதரவாளர்களிடையே காணப்படும் பிரிவுகளை தமக்கு சதாகமாக பாவித்து,நாட்டிலும் புலம் பெயர் தேசங்களிலும் அகலக்கால் நீட்ட ஆரம்பித்துள்ளனர். மிக அண்மையில், ஓர் செவ்வியில், என்னால் கூறப்பட்ட சில உண்மைகளை சகிக்க முடியாத ஒட்டு குழுவை சார்ந்த நபர், எனக்கு ஓர் மிரட்டல் தொலைபேசியை மேற்கொண்டார். அவர் தொலைபேசி அழைப்பில் கூறியதாவது

பிரான்சில் ஓர் ஊடகம், தாமாக முன்வந்து என்னை விமர்ச்சிப்பதற்குதங்களுக்கு நேரம் ஒதுக்கியுள்ளதாகவும், தாம் அவ் வேண்டுகோளை தாமதப்படுத்தியுள்ளதாக கூறியதுடன்,வேறுபட்ட நாடுகளில் உள்ள சிலரது பெயர் பட்டியலை வாசித்து, இவர்கள் யாவரும் உங்களை கண்டிப்பதுடன் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார்கள். இவை மிக வேடிக்கையாக இருந்த பொழுதிலும், “முன்பு, ஈ.என்.டி.எல்.எப்.ன் சர்வதேச பொறுப்பாளராக அறிமுகமான நீங்கள், எப்படியாக தற்பொழுது திடிரென வேறு யாருக்காகவோ குரல் கொடுக்கிறீர்களென” வினாவிய வேளையில், “நாங்கள் தற்பொழுது கூட்டாக செயற்பாடுவதாக பதில் கூறப்பட்டது”. இப் பதிலை, யாவரும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. காரணம், இவற்றின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவ் கூட்டின் தற்போதைய தேவை என்ன? ஒட்டு குழுவினரின் இவ் புதிய கூட்டுக்களை, பிரிந்து நின்று செயற்படும் தமிழீழ விடுதலை புலிகளின் செயற்பாட்டாளர்கள் ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

இதில் சுவரசியமான விடயம் என்னவெனில், தொலைபேசி அழைப்பில் கூறப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள இருவரை தொடர்பு கொண்ட பொழுது, ‘தமக்கு இவற்றிற்கும் எந்தவித சம்பந்தம் இல்லையென கூறி> கபடமான கதைகளை நம்ப வேண்டாமென’ அவர்கள் எம்மை வேண்டிக் கொண்டார். மிரட்டல் தொலைபேசி தொடர்பை ஏற்படுத்திய நபர், பொய்யும் பிரட்டும் திருகுதாளமும் நிறைந்தவர் என்பதனை, சில வருடங்களிற்கு முன்பு நிறைய ஆதாரங்களுடன் அறிந்துள்ளோம். சகல விடயங்களும் தனது ஒருங்கிணைப்பிலேயே நடைபெறவேண்டும் என விருப்பம் கொண்ட இவ் நபர் தனக்கு மேல் உள்ளவர்களை திருப்தி படுத்துவதற்காகவே இவ் மிரட்டலை மேற்கொண்டதாக சிலர் கூறினார்கள். வாழ்க அவரது பணி. நாகரீகம் பண்பாடு ஜனநாயம் நிறைந்த நாம் வாழும் நாட்டில்> எவருடைய காட்டுமிராண்டிதனமான மிரட்டல்களுக்கு நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.

2009ம் ஆண்டு மே மாதத்தின் முன்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு படைகளின் தமிழ் இன அழிப்பிற்கு துணை போனவர்கள், 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் மெல்லம் மெல்லமாக, தமது நீண்ட கால கனவை நனவாக்க காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளார்கள். வடக்கு கிழக்கில் உள்ள சில குடும்பங்களுக்கு உதவுவோம், பாடசாலை சிறார்களிற்கு உதவுவோம், விதவை பெண்களிற்கு உதவுவோம் என குட்டி கதைகள் கூறி, தமது மசவாசான திட்டங்களிற்கு புத்துயிர் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள், நாட்டிலும், புலம் பெயர் தேசங்களிலும் தமது உண்மையான அடையாளங்களை மூடி மறைந்துள்ள இவர்கள், தமிழீழ விடுதலை போராட்டத்தை தாம் தான் நடத்தி, இன்றைய நிலைக்கு வந்துள்ளது போல்பெருமிதத்துடன் பவனி வருவதுடன், தமக்கு ஓரு சில பாரளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் தம்பட்டம் அடிக்கிறார்கள்.

இவ் ஒட்டுக்குழுவிற்கு எதற்காக தமிழ் தேசிய கூட்மைப்பிற்குள் முன்பு இடமளிக்கவில்லை என்பதையும், இப்பொழுது யாருடைய செல்வாக்கை பாவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புகுந்தார்கள் என்பதையும், பெரும்பாலான மக்கள் அறிந்திருக்காவிடிலும், தமிழீழ செயற்பாட்டாளர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். வவுனியாவில் தமிழ் செயற்பாட்டாளர்களின் நெந்தியில் கைதுப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் செய்தவர்களும், பலரை கொன்று குவித்தவர்களும் அவ் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அடைய முடியாது என்பதை உணர்ந்ததும், பிறர் செல்வாக்கை பாவித்து, தமிழ் தேசிய கூட்மைப்பிற்குள் புகுந்து, தாம் கொன்று குவித்த தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று, இன்றுபாரளுமன்றம் சென்றுள்ளது, திறமையா? வலிமையா? அல்லது நயவஞ்சகமா?

இவை யாவற்றிற்கும் அடிப்படை காரணங்களில் ஒன்று, 2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே ஏற்பட்டுள்ள பிரிவுகளே. இவர்கள் தமக்குள் பிரிவுபட்டு சர்ச்சை பட்டு செயற் திட்டங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையை அவதானித்த ஒட்டுக்குழுவினர்,இவற்றை தமக்கு சதாகமாக பாவிக்கின்றனர். இதனை பிரிந்து நிற்கும் தமிழீழ செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்வதுடன், எதிர்காலங்களில் ஒட்டு குழுக்களுக்குளை சார்ந்த யாரும், எந்த தேர்தலிலும் வெற்றி பெற இடமளியாது பார்த்து கொள்ள வேண்டும். ஒட்டு குழுக்களுக்குளை சார்ந்தவர்கள், எதிர்காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பத்தில், இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளென கொள்ளாது, இவர்கள் ஒட்டுக் குழுக்களை சார்ந்தவர்கள் என்பதை, தமிழீழ மக்களுக்கு, அதாவது வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் தெளிவு படுத்த வேண்டும்.

ஒட்டு குழுக்களுக்குளை சார்ந்தவர்கள் நாட்டிலும், புலம் பெயர் தேசங்களிலும் அகலக்கால் வைப்பது,தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளிற்கு கிடைக்கும் பின்னடைவாகவே அமையும். இவர்கள் அன்றும் இன்றும் என்றும், இனவாத சிங்கள அரசுகளுடன் கை கோர்த்து நிற்பது மட்டுமல்லாது,இவர்களிற்கு தமிழ் தேசியத்திலோ, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளில் எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதே உண்மை. இவர்கள் சந்தர்பத்திற்கு ஏற்ப தமது கொள்கைகளை மாற்றுவதுடன்,அரசியல் பயணத்தில் ஓர் தூர நோக்கற்றவர்கள் என்பதனை இவர்களது அரசியல் வரலாறு காண்பிக்கிறது. இவர்கள் எப்படியாக தமது செயற்பாடுகளிற்கு, தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு இரு ஊதரணங்களை இங்கு தருகிறேன்.

மறைந்த டேவிட் ஐயாவிற்கு ஓர் அஞ்சலி கூட்டம், ஒட்டு குழுக்களை சார்ந்தவர்களினால் பிரான்ஸில் ஒழுங்கு செய்யப்பட்டது. இது டேவிட் ஐயா பற்றிய கூட்டம் ஆகையால், தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் சிலரும் அங்கு சமூகமளித்திருந்தனர். இக் கூட்டத்தின் மௌன அஞ்சலி வேளையில்,தனது வழமையான சுதப்பல் வேலையை ஒருங்கமைப்பாளர் ஆரம்பித்து விட்டார். இறுதியில் கூட்டம் முடிவடைந்ததும், இவர்கள் தமது வழமையான கூட்டத்தை, அதே இடத்தில் நடத்தியுள்ளார்கள். இச் செயற்பாடு மாஜா ஜாலா வித்தைக்கு ஒப்பானது.

ஆகையால், முன்னைய காலங்கள் போன்று, எதிர்காலங்களிலும் இவர்கள் தமது சந்திப்புக்கள்,கூட்டங்களை, ஒரு சிலருடன் தொடரட்டும்.விபரமாக கூறுவதனால், எதிர்காலங்களில் இவர்களது எந்த சந்திப்புக்கள்> கூட்டங்களில்> மானம் உள்ள தமிழீழ விடுதலை விரும்பிகள்கலந்து கொள்ளாதுபுறக்கணிக்க வேண்டும்.

கடந்த ஏழு வருடங்களாக இவர்கள் காட்டிய கண்கட்டி வித்தைகள் போதும். இவர்கள் தமது கொடுர சிந்தனைகளிலிருந்து எள்ளுஅளவேனும் மாறியுள்ளதாக தென்படவில்லை.

இவர்களை பொறுத்த வரையில், டேவிட் ஐயாவை தெரிந்தவர்கள் மட்டுமே, டேவிட் ஐயா பற்றி உரையாற்ற முடியும். அதே போல் காந்தீயத்தில் வாழ்ந்தவர்களே மட்டுமே காந்தீயம் பற்றி பேச முடியும். நல்லவேளை, இலங்கை சுதந்திரம் பெறும் பொழுது வாழ்ந்தவர்கள் மட்டுமே> இலங்கை அரசியலை கதைக்க முடியுமென இவர்கள் கூற முன்வரவில்லை. என்ன செய்வது, சட்டிக்குள் இருந்தால் தானே அகப்பைக்குள் வருவதற்கு. அடுத்து, 2009ம் ஆண்டின் பின்னர், ஒட்டு குழு ஒன்றின் இரு பிரதிநிதிகள், ஐ. நா. மனித உரிமை சபை அமர்வுகளில் பங்கு கொள்ள ஆரம்பித்தனர். இவர்களின் அடையாளங்கள் பிறருக்கு தெரிய வந்ததும்,ஒருவர் சட்டுபோக்கு சொல்லி மாறிவிட்டார்.

மற்றவர் சர்வதேச மொழிகளில் ஆளுமையற்ற சிலருக்கு இன்று தலையில் மிளகாய் அரைகிறார். அதற்காக இவ் நபர், சர்வதேச மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் அல்லா. சுருக்கமாக கூறுவதனால் ஆளுமையற்ற சிலரிடம் இவ் நபர் நன்றாக பணம் சம்பாதிக்கிறார். ஆளுமையற்றவர்களின் கதைகள் மிக வேடிக்கையானவை. இவர்களில் சிலர் தம்மை, யாவரும்‘அண்ணை, ஐயா’ என கூறி மதிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இவற்றை செய்ய தவறுபவர்களை, ஓரம் கட்டுவதற்காக, ஆளுமையற்ற சிலரை ‘கீறீஸ் கம்பத்தில்’ ஏற்றி வைத்துள்ளனர். அது யாராக இருந்தாலும, தம்மால் முடிந்ததை, இயலுமானததை தான் செய்ய,சாதிக்க முடியும்.

மிக அண்மையில் ஜனதிபதி மைத்திரிபாலா சிறிசேன பிரான்ஸிற்கு விஜயம் செய்த வேளையில்,ஒட்டு குழுக்களின் வாரிசுகள் சிலர்,ஜனதிபதி சிறிசேனவுடன் புகைபடங்கள் எடுத்து மகிழ்ந்ததுடன்,சிறிலங்கா புலனாய்வாளர்களினால் பாரிஸில் நடாத்தப்பட்ட இரகசிய கூட்டம் ஒன்றிலும் உரை ஆற்றியுள்ளனர். இதை தான் சொல்வது, பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் வேளையில், மற்றவர்கள் தம்மை காணவில்லையென எண்ணுவதாக. வாழ்க இவர்களது மனிதஅபிமானபணி. நெய்குடம் உடைந்தது நாய்க்குவேட்டை என்றஅடிப்படையில யாவும் கண்மூடித்தனமாக நடக்கிறது. உலகின் தந்துவங்களில் ஒன்று மேலே போபவை யாவும் கீழே வந்தே ஆக வேண்டும்.பொறுத்திருந்து பார்ப்போம். “மா புளிப்புது அப்பத்திற்கு நல்லது” என்பது தமிழ் பழமொழி. இது போல் ஒட்டு குழுக்களதும்,அவர்களிற்கு துணை போபவர்களது செயற்பாடுகள், அப்பத்திற்கு நல்லதாக, எதிர்காலத்தில் அமையுமென நம்புகிறோம்.

– ச. வி. கிருபாகரன் – பாரிஸ், பிரான்ஸ்