விதைத்தவர்கள் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை(பாகம் 1)

(Sham Varathan)

30 வருடங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை போராட்டம் , பெரும்பான்மை இனத்தவரின் இரும்புக் கரம் கொண்டு ஆயுத முனையில் அடக்கப்பட்ட போது கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் மத்தியில் தடம்பதித்தவர்கள் இருவர்.

இதில் ஆயுத பலத்தால் மட்டுமே பெரும்பான்மை இனத்திடம் இருந்து எமது உரிமைகளை வென்று எடுக்க முடியும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையை தனது போராளிகளுக்கும், மக்களுக்கும் ஊட்டி பல சமர்களை சந்தித்து வெற்றி கொண்டவர் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன்.

ஆயுப்போராட்டம் மட்டும் எமது விடுதலையை தீர்மானித்து விடாது அரசியல் ரீதியாகவும் எமது மக்களுக்கு ஓர் வலுவான கட்டமைப்பு அவசியம் அதற்கு முதலில் எமக்குள் இருக்கும் வர்க்கம் ரீதியான முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்ற தூர நோக்கு சிந்தனையுடன் அதில் வெற்றியும் கண்டு வலுவான ஓர் அரசியல் கட்டமைப்பை கட்டியெழுப்பியவர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் பத்மநாபா.

இவ்வாறான தெளிவான சிந்தனையின் அபாரவளர்சி சிங்கள ஆட்சியாளர்களை மட்டுமல்ல பிராந்தி நாடுகளையும் கிலிகொள்ள வைத்தது அங்கே சதிவிளையாட தொடங்கியது.

இந்த சதியின் ஆரம்பம்மே பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புடன் விரிக்கப்பட்ட சகோதர யுத்தம் என்ற வலைக்குள் எமது போராட்ட அமைப்புக்கள் சிக்கிக் கொண்டன, இதில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக காணப்பட்டது.

இந்தியாவிற்கு ” பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட வேண்டும்” என்ற இக்கட்டான நிலை இருந்தது , போராட்டா இயக்கங்கள் வளர்ச்சியடைந்து இலங்கையில் தனி நாடு உருவாகுமானால் தனது மாநிலங்கள் காஷ்மீர் , தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து செல்லும் நிலையை தடுக்க முடியாது போய்விடும் என்ற நிலையும், போராட்ட இயக்களுக்கு ஆதரவாக செயல் படும் நிலையில் தங்கள் பிராந்தியத்துக்குள் சீனாவின் தலையீடு அதிகமாகும் என்ற நிலையில் இவை இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய தேவையும் இருந்தது.
தொடரும்…….