ஸ்டீபன் ஹாக்கின்: மனித குலத்தின் இருப்பை நேசித்த விஞ்ஞானி

(சாகரன்)

மூளையின் உயிர்பு இருக்கும் வரை வளர்ச்சியடைந்த உயிரினமான மனிதனால் இந்த மனித குல மேம்பாட்டிற்கு இருப்பிற்காக பணியாற்றமுடியும் என்று நிரூபித்தவர் ஸ்டீபன் ஹாக்கின்.
சேர் ஐசாக் நியூட்டனின் பிறந்த மாதத்தில் அல்லது பூமி தட்டையானது அல்ல உருண்டையானது என்று நிறுவி தண்டனைக்குள்ளான கலிலியோவின் பிறந்த தினத்தில் பிறந்தவர். சார்பு இயங்கியலின் தந்தை ஐன்ஸ்ரைன் பிறந்த நாளில் தனது முளைச் செயற்பாட்டை நிறுத்திக் கொண்டவர் இதே தினம் சமூக முன்னேற்றத்திற்கான கம்யூனிச சமூக விஞ்ஞான தத்துவத்தின் தந்தை கார்ல் மாக்ஸ் இன் பிறந்த நாளும் இதே நாள் தான்.

இயற்கையிற்கு முரணான மனிதர்களின் செயற்பாடு இந்த பிரபஞ்சத்தின் விரிவாகத்திற்கும், சுருகத்திற்கும் காரணமாக அமைகின்றது. எனவே இன்னும் 100 ஆண்டுகளுக்குள் இந்தப் பிரபஞ்சம் அல்லது பூமி அழிவிற்குள் உள்ளாகும் என்பதை விஞ்ஞானபூர்வமாக நம்பி மனிதர்கள் வாழ்வதற்குரிய மாற்றுக் கிரகங்களை கண்டு பிடித்து மனிதர்கள் அங்கு குடியேறுவதன் மூலம் மனித இனம் தனது முழுமையான அழிவில் இருந்து காப்பாற்றப்படவேண்டும். இதற்கான சாத்தியப்பாடுகளுக்கான ஆராய்சியல் ஈடுபட்டிருக்கும் போது இவரின் முளையின் செயற்பாடுகளும் முழுமையாக செயல் இழந்ததினால் மரணத்தை தழுவிக் கொண்டார்.

நீயூட்டனின் ஈர்பியல் இதனைத் தொடர்ந்த ஐன்ரைன் இன் சார்பியல் இதனைத் தொடர்ந்து துகள்களின் சேர்கை பிரிகை என்பவற்றுடன் சம்மந்தப்பட்ட சக்தியியல் என்பவற்றை தனது ஆராய்சியின் மையப் புள்ளிகளாக கொண்டு ஆரம்பித்த இவரின் ஆராய்சிகள் கருந்துளை என்ற விடயத்தில் அதிக கவனம் எடுத்து செயற்பட வைத்தது. கருந்துளை என்பது மிக அதிக ஈர்ப்பு சக்தி கொண்ட அண்ட வெளி என்று நம்பப்பட்டிருந்தது. எனவே கருந்துளையிற்குள் உள்ளே சென்று யாரும் பார்க்கவும் முடியாது, உள்ளே சென்றால் திரும்பவும் முடியாது இதற்குள் சென்றால் இன்னொரு பிரபஞ்சத்திற்குள் சென்றுவிடலாம் என்று நம்பப்பட்ட விஞ்ஞான எடுகோளை மையப்படுத்தி இவரின் ஆராய்சிகள் விரிந்து சென்றன. இறுதியில் கருந்துளையில் இருந்து கதிர் வீச்சு மூலம் துகள்கள் வெளியேறுகின்றன என்ற கண்டுபிடிப்பு இதுவரையும் நம்பப்பட்ட கருந்துளைகள் பற்றி விஞ்ஞான நம்பிக்கைகளை புரட்டிப் போட்டன. கால ஓட்டத்தில் இந்த கருந்துளை முன்பு நம்பப்பட்டது போலல்லாது மறைந்து விடும் என்ற இவரின் நிறுவல்கள் இவரை விஞ்ஞான உலகதில் முன்னிலைக்கு கொண்டு வந்தது.

கூடவே மாற்று பிரபஞ்சவாசிகள் மனிதர்களை விட வளர்ச்சியடையடைந்த அறிவியலை உடையவர்கள் எனவே இவர்களுடன் ‘முரண்படும்’ இவர்கள் பற்றிய ஆராய்சிகளை தவிர்ப்பது நலம் என்ற எச்சரிக்கையையும் விட்டிருந்தார்.

விரிவடைந்து சென்று கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சம் ஒரு நிலையில் சுருங்கத் தொடங்கும் அப்போது நேரம் பின்னோக்கி நகரும் என்றார் ஸ்டீபன் ஹாக்கின் (அதுதான் என்றும் பதினாறு என்று நாம் சொல்வோமே). இது ஐன்ஸ்ஸ்ரைன் இன் சார்நிலை கோட்பாட்டை தளுவிய நிறுவல் ஆகும் மேலும் ஐன்ஸ்ரைன் போன்ற விஞ்ஞானிகளின் கடுநிலை கணித நிறுவல்களை இலகுவில் புரியும் வண்ணம் மாற்றியமைத்தததில் ஸ்டீபன் ஹாக்கின் பங்கு மகத்தானது.
இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் சூரியனின் (சக்தியின் பிரதான ஊறுகால்) இன் வெடிப்பால் ஏற்பட்ட துகள்களின் இணைப்பால் ஏற்பட்டது இதுவே அதனைத் தொடர்ந்து உருவான கிரகங்கள் சூரியனை சுற்றி ஈர்ப்பு (மைய நாட்ட, நீக்க விசை) விசைக்கு உட்பட்டு சுழன்று கொண்டிருக்கின்றன.

இந்த துகள்கள் அணுக்களினால் ஆனவை அணுக்கள் எலக்ரோன், நியூத்திரன் புரோத்தோன் போன்ற மூன்று உப துகள்களினால் ஆனவை என்று நம்பப்பட்டு நிறுவப்பட்டிருக்கும்? நிலையில் ஒரு அணுவின் மொத்த நிறை இந்த மூன்று உப துகள்களின் மொத்த நிறையை விட அதிகமாக இருப்பது அறியப்பட்டது. இதிலிருந்துதான் இவ் மூன்று உப துகள்களுக்கு அப்பால் இவ் மூன்று உப துகள்களையும் இணைக்கும் நான்காவது உப துகள் ஒன்று உள்ளது என்றும் இது உண்மை என்று விஞ்ஞானபூர்வமாக 2012 நிறுவப்பட்டு அது கடவுளின் துகள் என்றும் பெயரிடப்பட்டது. இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய இந்த துகள்களின் மோதல்கள் ஒளியைவிட வேகமான வீச்சில் அதிக சக்தியை வெளிப்படுத்தி இந்த பிரபஞ்சத்தை பஸ்மாக்கிவிடும் ஆபத்தை உடையன என்று எச்சரித்தார் ஸ்டீபன் ஹாக்கின்.

இயற்பியலுக்காக தன்னை அற்பணித்த ஸ்டீபன் ஹாக்கின் மனித உரிமைகளுக்காகவும் உரக்க குரல் கொடுத்திருந்தார். வியட்நாம் மீதான அமெரிக்க ஆக்கரமிப்பு யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுத்தமை, ஈராக்கில் அமெரிக்காவின் ஆக்கரமிப்பை கண்டித்தமை, இஸ்ரேல் வழங்கவிருந்த ‘கௌரவத்தை’ பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் செய்து வரும் அநியாயங்களை கண்டித்து ஏற்க மறுத்தது போன்ற செயற்பாட்டின் மூலம் தான் ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்யும் நபர்களின் நலன்களுக்காக செயற்படுபவன் அல்ல மாறாக மனித குலத்தின் மீட்சிக்காக இருத்தலுக்காக தேடலில் ஈடுபடுபவன் என்பதை நிறுவி நின்ற மேதையின் மறைவு கம்யூனிச தந்தை கார்ல் மாக்ஸ் இன் பிறந்த தினத்தில் நிகழ்ந்தது ஒரே அலைவரிசையில் பயணிப்பவர்களின் இணைப்பின் வெளிப்பாடோ…? என்று சாமான்ய மக்களால் நம்பப்படுவதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

கடவுளின் துகள்கள் கண்டறியப்பட்ட சில தினங்களின் பின்பு வந்திக்கானில் நடைபெற்ற அண்டவியல் மகாநாடு ஒன்றில் போப்பாண்டவர் பிரான்சிஸ் பிரபஞ்சம் உருவான பின்னர் உள்ளதை பற்றி ஆராய்சி செய்யுங்கள் மாறாக பிரபஞ்சம் உருவாகம் பற்றி ஆராய்ச்சி செய்தால் அது கடவுளின் இருப்பை பற்றி கேள்விக் குறியாக்கும் என்பதினால் அதை செய்யக் கூடாது என்றார்.

இதற்கு பதிலளித்த ஸ்டீபன் ஹாக்கின் நடந்து முடிந்த மகாநாட்டில் நான் சமர்பித்த பிரபஞ்சம் உருவாக்கம் சம்மந்தமான தனது கட்டுரையை போப் பாண்டவர் வாசிக்கவில்லை போலும் என்றும் தனது கட்டுரை பற்றி அறிந்திருந்தால் கலிலியோ போல் தானும் விசாரணக்கு உட்படுத்தப்பட சில வேளைகளில் வாய்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தனது கடவுள் மறுப்பு கொள்கையை எடுத்துரைத்தார்.
இந்த அறிக்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடவுள் துகள் பற்றிய கருத்துக் கூறுகையில் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தை அறிந்து கொள்ள இது உதவப் போகின்றது என்ற கடவுளினால் பிரபஞ்சம், உயிரினங்கள் படைக்கப்பட்டன என்ற ஆன்மீக நம்பிக்கைகு பதிலளித்தைதான் ஸ்டீபன் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தனிப்பட்ட வாழ்வில் கற்றறிந்த பெற்றோர்களின் பிள்ளையாக பிறந்த இவர் தானும் கற்பதிலும் ஆராய்சி செய்வதிலும் ஆர்வம் காட்டினார். காதலும் செய்தார். கல்யாணமு; செய்து பிள்ளைகளும் பெற்றார.; கடவுள் மறுப்பு கொள்கையினால் காதல் மனைவி பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து இறுதிக்காலத்தில் இவருடன் இணைந்த நிகழ்வுகளையும் கொண்டது இவரின் வாழ்வு. நோயின் தாக்கம் அதிகரித்து சக்கர நாற்காலி வாழ்கையிற்கு சென்ற நிலையில் தனது தினசரி வாழ்விற்கு உதவிய பெண்ணை இடையிட்ட காலத்தில் தனது வாழ்கைத் துணையாகவும் கொண்டிருந்தார்.

20 வயது முன்கூற்றில் ஏற்பட்ட நரம்பு சம்மந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் செயலிழந்து வருகையில் தனது முளை செயலிழக்காத வரை தான் தனது ஆராய்சியில் தொடரப் போவதாக கூறி மருத்துவ உலகம் கொடுத்த ஆகக் கூடிய 2 வருட வாழ்வுக் கெடுவைக் கடந்து மேலும் 50 வருடங்களுக்கு மேலாக தனது மூளையின் வாழ்வை தக்க வைத்துக்கொண்டார்.

சமூக விஞ்ஞானத் தந்தை கார்ல் மாக்ஸ், சார்பியல் தந்தை ஐன்ஸ்ரைன், மரபணுவை பிரித்து வாசிப்பதை கண்டறிந்த வாட்சன் குழு விஞ்ஞானிகள் வரிசையில் இயற்பியல் தந்தை மனித குலத்தில் இருப்பை உறுதி செய்வதற்காக தன்னை அற்பணித்த ஸ்டீபன் ஹாக்கின் மிக உயர்த்தில்தான் நிற்கின்றார்