ஹீரோ – அனில் குப்தா

(Siva Raj)

இரண்டு மாதங்களுக்கு முன்பாக, கோயம்புத்தூரில் இருந்த சமயத்தில் முன்னறியா எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு இரண்டு மூன்று நாட்களாக அடிக்கடி தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. ஜான்சுந்தர் அண்ணனின் ‘டமருகம்’ சார்ந்த வேலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம். புதுநண்பர்களைச் சந்திப்பதற்கான தகுந்த மனநிலை அமையாததாலும், சினிமா சார்ந்த தோழர்களை எதிர்கொள்வதில் ஒருசில தயக்கங்கள் இருந்ததாலும் நான்கைந்து அழைப்புகள்வரை தொடர்ந்து தவிர்த்தேன். இனிமேற்கொண்டு மறுதலிக்கவே முடியாத சூழலில், அந்த அழைப்பை ஏற்றுப் பேசினேன். மறுமுனையில் மித்ரன் பேசினார்.