150 ஏக்கர் குளம், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், துரிதமாக நடக்கும் தூர்வாரல்: ஆச்சரியப்படுத்தும் பட்டுக்கோட்டை கிராமம்!

நீ உலகில் பார்க்க விரும்பும் மாற்றம், முதலில் உன்னிடம் நிகழ வேண்டும் – காந்தி

பட்டுக்கோட்டையில் உள்ள ஒட்டங்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து அங்குள்ள 150 ஏக்கர் கொண்ட பெரியகுளம் குளத்தைத் தாங்களாகவே தூர்வாரி வருகின்றனர்.