1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! (Part 2)

(அந்தோணி)

‘ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய மிருகம்தான். இந்த மல்லி என்ற மிருகம் பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய மிருகம்கள் புகழ்ந்து சொன்னார்கள்.