27வது தியாகிகள் தினம்

தோழர்பத்மநாபா மற்றும் தோழர்கள் பன்னிருவர் புலிகளால் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து படுகாலை செய்யப்பட்ட ஜீன் 19 நாளை நாங்கள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கின்றோம். இந்த நாளில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூரும் பொதுநாளாகக்கொண்டு நாங்கள் ஒருங்கிணைந்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்துகிறோம்.தோழர்பத்மநாபா அவர்களைப்போல் ஒரு மனிதரை, தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை அவர் இல்லாத தலைமை இன்று வரை வெற்றிடமாக உள்ளதையே உணர்கிறோம்.
தற்போதுள்ளவர்கள் அவர் கொள்கைகளை கடைப்பிடிக்கிறார்களா? தோழர் மீது மக்கள் மீது கரிசனை கொண்டு;னரா? ஏனறால் அது இல்லை என்றே சொல்லிவிடலாம்.
நாம் தோழர்பத்மநாபா வழிவந்தவர்கள் அவர் கொள்கைகளை மனதில் தாங்கி நடப்பவர்கள் அவர் காட்டிய பாதையில் செல்லாமல் வழிதவறி நடப்பது வேதனையை கொடுக்கிறது.
தற்போது பதவிதான் சிலரது இலக்காக உள்ளது அதற்காக எவர் பின்னாலும,எந்தக்கொள்கையையும் தாங்கிப்பிடிக்க துணிந்து விட்டார்ககள். தோழர்பத்மநாபா மக்கள்மீதும் தோழர்கள் மீதும் கொண்ட கரிசனையை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும்.
தற்போது இலங்கையின் வடக்கு மாகாணசபையில் குழப்பம் பதிவிச்சண்டை நீயா? நாணா? போட்டி. பலர் அழிந்து அதனால் உருவாக்கபட்ட சபை இவர்கள் மக்களுக்கு அந்தசபை மூலம் நல்ல சேவைகளைச் செய்வார்கள் என மக்கள் எதிர்பார்த்தார்கள் குறுகிய காலத்திலேயே ஊழல் செய்யத்தொடங்கியது வீதிக்கு வந்து விட்டது.
படித்தவர்கள்,கல்விமான்கள் இருந்தால் வித்தியாசமாக சிந்திப்பார்கள் நல்லயோசனை சொல்வார்கள் இதனால் சபைக்கு பெருமை அதன் மூலம் மக்கள் நன்மை அடைவார்கள் என எண்ணி அப்படிப்பட்டவர்களைக் கொண்டு சபையை அலங்கரித்தார்கள். அது அலங்கோலப்பட்டுவிட்டது.”கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் தக்குமுக்கு திக்கித்தாளம்.”
இந்த நேரத்தில் தோழர்பத்மநாபா அவர்கள் துணிச்சலுடன் ஏற்க்ககொண்ட வடக்கு-கிழக்கு மாகாணசபையை நாம் எண்ணிர்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.தோபழர்பத்மநாபா அவர்கள் அந்தச்சபையின் முதல்வராகஎண்ணியது இல்லை. அதனைச் செவ்வனே நடாத்த அவர் ஆலோனைகள் வழங்கினார். கண்காணித்தார்.மக்களுக்கு அதனால் நன்மைகளை கிடைக்கவேண்டும் என அரும்பாடுபட்டார்.
இந்த நாளில் தோழர்பத்நாபா அவர்களையும் அவர்களுடன் மரணித்த தோழர்களையும் ஈழப்போராட்டததில் மரணித்த பொதுமக்களையும் நினைவு கூருவோம்.
தோழர்பதநாபா அவர்கள் வழிநடப்போம் அவர் தன்னகத்தே கொண்டிருந்த அத்தனை நற்குணங்களையும் நாமும் பெற முயல்வோம்.
SDPT -பத்மநாபா முன்னணி தோழர்கள்
தமிழ்நாடு