உண்மையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனை இரண்டு தான்…..

ஒன்று ராணுவத்திடம் இருக்கும் மக்களுடைய காணிகள் …….

மற்றது சிறையில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும்…….

ஆகவே இவர்களுக்கு ஒரு கட்சி தேவை இல்லை…….

அவர்களுக்கே அது புரிகிறது போலும்…….

உளவு அமைப்புகளுடன் சேராமல் எந்த ஒரு அமைப்பும் இருக்க முடியாது……..

விக்கி ஐயாவும் அமரிக்கா போய் வந்த பின்தான் இவ்வளவு துள்ளலும்…….

உலகத்தில் எங்கு என்ன அமைப்பு இருந்தாலும் அதில் எப்படியும் மூக்கை நுழைக்கும் அமரிக்கா தன்னுடைய நாடுக்கு வரும் அரசியல்வாதிகளை சும்மா விட்டதா???

அல்லது …

தன்னுடைய நாட்டில் இருக்கும் நாடுகடந்த தமிழ் ஈழத்தை சும்மா விட்டதா???

யாரை ஐய்யா ஏமாற்றுகிறார்கள் …..

இந்த புதிய கட்சியின் ஆரம்பம் இந்தியாவுக்கும் அமரிக்காவுக்கும் மிக முக்கியம்…..

காரணம் எப்போதாவது இலங்கையில் மீண்டும் ஒரு அரசு ராஜபக்ச போன்று சீனாவுடன் கைகோர்க்கும் அரசு வரும் போது மீண்டும் தமிழ் மக்களை வைத்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்………..

ஆகவே ஒரு வலுவான Hardliner கள் இருக்கும் அல்லது Hardliner களை மீண்டும் மீண்டும் உருவாக்கும் ஒரு அமைப்பு வெளிநாட்டு உலவுகளுக்கு அவசியம்……

அவர்களின் பேச்சை கவனித்து பார்த்தல் புலம்பெயர் தமிழர்களுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது……..

ஆகவே ஒரு காலத்தில் ஆயுதம் தேவை படுமானால் பணத்துக்கு ஆள் வேண்டுமே…….

கூட்டமைப்பின் இரண்டு பக்கமும் உளவாளிகள் தான்………
இன்று நேற்று அல்ல தமிழ் தலைவர்கள் என்று தம்மை சொல்லி கொள்பவர்கள் எல்லோரும் சோரம்போனவர்கள் தான்…..

தமிழனுக்கு கட்சி தேவை இல்லை நாங்கள் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து இலங்கை ஒரு நாடு என்பதை முன்வைத்து தேசிய அரசியலில் எமையும் இணைத்து கொண்டு வாழ்வது தான் எமது எதிர்கால சந்ததிக்கு மிகவும் சிறந்தது……

தேசியகட்சிகள் ஆகிய SLFP …UNP …JVP …போன்ற கட்சிகளுடன் தான் தமிழ் மக்கள் விரைவில் இணைந்து கொள்ளவேண்டும்…..

(Ratnasingham Annesley)