கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 2)

(தோழர் ஜேம்ஸ்)
எமது புகையிரம் மதியம் அளவில் கும்பகோணத்தை அடைந்து. கும்பகோணம் பழமை வாய்ந்த புராதன நகரம் காவேரி ஆறு இந்த நகரத்தை ஊடறுச் செல்லுகின்றது. நாகபட்டினம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி கும்பகோணம் வழியாக பாய்ந்து தஞ்சை மாவட்டத்தை செழுமையாக்கிக் கொண்டிருக்கும் நதி. இந் நதி தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் பிரிக்கும் வட மேற்கு மலைத் தொடரில் ஆரம்பித்து திருச்சி தஞ்சாவூர் ஊடாக பாக்கு நீரிணை ஜலசந்தில் கடலுடன் கலக்கும் ஆற்றுப்படுக்கையில் இடையில் உள்ள பட்டணம் கும்பகோணம் கும்பகோணம் வெத்திலைக்கு மிகவும் பிரபல்யமான இடம். ஏன் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைந்த இடமும் கூட. 12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் நிகழ்வு நடைபெறும் விஷ்ணு கோவில்கள் உள்ள ஊர். {“12 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் நிகழ்வு நடைபெறும் கும்பேஸ்வர் [ சிவன் ] கோவில் உள்ள ஊர்.   அதுபோல விஷ்ணு [சாரங்கபாணி] கோவில் உள்ள ஊர். சிவனுக்கு நடப்பது மகாமகம். விஷ்ணுவுக்கு நடப்பது பிரமோற்சவம். ஒருமுறை மிகப்பிரமாண்டமான  [ 40 தொன்] கும்பேஸ்வர் தேர் நகர மறுத்தவேளை, ஸ்டாலின் அண்ணா சிவபுரம் முகாமில் பயிற்சியில் இருந்த     ஈ பி ஆர் எல் எப் தோழர்களை அழைத்து சென்று, அவர்களை வடம் பிடிக்க செய்ய , தேர் அரோகரா கோசத்துடன் நகர்ந்தது. கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருந்தாலும், நம்புவர்களின் மன மகிழ்ச்சியை மனதில் கொண்டு, ஸ்டாலின் அண்ணன் செய்த மக்கள் சேவை அது.    (நன்றி: தகவல்: ராம்)}


கும்பகோணம் புகையிரத் நிலையத்திலிருந்து எமது சகாக்கள் இருக்கும் இடத்திற்கு போகும் விலாசமோ பாதைகளோ தெரியாத நிலை கண்ணணைக் கட்டிவிட் நிலை தற்போது. மீண்டும் அங்கு நின்ற பொது மகன் ஒருவரிடம் நாம் விடுதலைப் போராளிகள் என்றதும் நான் கூட்டிக்கொண்டே விடுகின்றேன் என்று அது நம்ம ஆர்.பி. ஸ்டாலின் அண்ணா இடம் என்று எம்மை அழைத்துச் சென்றார். நடையாக அவரின் இடத்திற்கு சென்றால் எம்வர்கள் பலர் அவ்விடத்தில் தெருக்களில் நிற்றவரகள் எம்மை அடையாளம் கண்டு கொண்டனர். எமது சகாக்களுடன் அறிமுகம் சுகம் விசாரிப்பிற்கு பின்பு தோழர் நாபாவை இந்த அலுவலகத்தின்(அலுவலகம் என்றால் கற்பனை பண்ணாதீர்கள் முகப்பில் ஒரு சிறிய பலசரக்கு கடை மாதிரியான ஒர தோற்றம் அதற்கு பின்னால் பின்னால் என்று தொடர்ந்து அறைகள்) ஒரு அறையில் ஒரு மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தார் நாபா அவருக்கு அருகில் ஆறு அடிக்கும் அதிகமான உயரமும் பெரிதாக அழகாக மீசை வைத்திருந்த வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த ஒருவர் அளவளாவிக் கொண்டிருந்தார். எம்மை வரவேற்ற தோழர் நாபா எம்மை அவருக்கு அறிமுகப்படுத்தி இவர்தான் எங்கள் அண்ணா என்று அறிமுகம் செய்து வைத்தார் முதல் பார்வையிலேயே என்னை கவர்ந்து விட்டார் ஸ்ராலின் அண்ணா.

எமது பயணங்கள் பற்றி விசாரித்துவிட்டு ஈழத்தில் நிலமை எவ்வாறு உள்ளது என்று மிகுந்த அக்கறையுடன் எல்லா விபரங்களையும் கேட்டறிந்தார். புதிதாக ஏற்பட்டிருக்கும் தொடர்ந்த ஊரடங்கும், சுற்றி வளைப்புக்களும் கைதுகளும் பூசா முகாம் பற்றியும் விசாரித்தார்.
இன்னும் சில காலம் பொறுங்கள் எங்கள் தயாரிப்புக்கள் முடிந்ததும் இராணுவம் வீதிக்கு வந்து சுற்றிவளைப்பில் ஈடுபடவிடாமல் முகாங்களுக்குள் முடக்குவோம் என்று தனக்கே உரித்தான நம்பிக்கையுடன் சிரித்தார் அண்ணா. அவரின் வார்த்தையில் இருந்த உறுதி நம்பிக்கை என்னை அவர் கூற்றின் செயற்பாட்டுத் தன்மையை ஏற்க வைத்தது. ஆனாலும் எப்படி இது சாத்தியம் ஆகும் என்று நான் புரியாமல் திரு திரு என் முழித்தேன். அன்று சாயங்காலம் இந்த அலுவலகத்தின் ஒரு பக்கத்தில் அமைந்த கடைச்சல் பட்டறை எமக்கு சில செய்திகளை சொல்லியே நின்றது…..!

அன்று இரவு நானும் தோழர் நாபாவும் அண்ணா வீட்டு மொட்டை மாடியில் ஈழத்து நிலமைகள் பற்றி நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். இரவுச் சாப்பாட்டிற்கு அண்ணாவின் வாழ்கைத் துணைவியார் இந்திரா (அண்ணியார்) எம்மை அழைத்தார். தரையில் அமர்ந்திருந்து இட்லி, சட்னி, சாம்பார், தொட்டுக்க பொடி என நிறைந்த விருந்தோம்பல். நான் வழமைபோல் எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து சாப்பிட ‘என்னாங்க இப்படி எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து சாப்பிட்டால் எப்படி ஒவ்வொன்னிற்குமான சுவை தெரியும்…? தனித் தனியர்க இட்லியுடன் தொட்டுச் சாப்பிடுங்கள் சுவையை அறிந்து சாப்பிட முடியும் என்றார் அவ்வாறே தொடர முற்பட்டாலும் தொட்டில் பழக்கம் எம்மை பல தடவை பழைய நிலைமைக்கே கொண்டு வந்து குழைத்து அடிக்க வைத்துவிட்டது. எல்வாவற்றையும் ஒரு குழந்தைபோல் அண்ணா பார்த்து ரசித்தார் அண்ணியும் அண்ணருக்கு சளைத்தவரில்லை போல் எம்மை சக தோழர்களாகவே உபசரித்தார்.

நாம் சாப்படும் இடைவெளியில் ‘நைன்னா’ என்று அழைத்த வண்ணம் இரு குழந்தைகள் அருண் விஜே தந்தையிடம் ஏதோ கிசு கிசுத்து விட்டு நின்றனர் அது நம்ம ஜேம்ஸ்சு (இவ்வாறு ஸ் இல் பெயர் உள்ளவர்களை ‘சு’ போட்டு அழைப்பார் ஸ்ராலின்அண்ணா) தோழர் ஊரிலிருந்து வந்திருக்கின்றார் என்று புதியவரான என்னை அறிமுகப்படுத்தினார் ஸ்ராலின் அண்ணா
இன்றுவரை நான் சாப்படும் நேரங்களில் ஸ்ராலின் அண்ணா உணர்த்திய தனித்தனியாக சாப்பிட்டால்தான் சட்னி சாம்பார் பொடி என்பன எவ்வாறு இட்லியுடன் சேரும் போது வித்தியாசமான சுவைகளைச் சேர்க்கும் என்பதை முடிந்தவரை கடைப்பிடிக்கவே முயல்கின்றேன்.

1884 இலிருந்து இன்றுவரை என் நினைவுகளுடன் என் சாப்பாட்டு நேரங்களில் என் முன்னால் புன்சிரிப்புடன் அமர்ந்திருக்கும் அண்ணனின் இழப்பு எம்மைப் போன்ற பலரையும் அதிர்சியடையவே செய்து விட்டது. ஆண்ணனின் இழப்புச் செய்தியை எமது சகா மாவின் குறம் செய்தி மூலம் அறிவித்த போது நான் வேலைத்தலத்தில் இருந்தேன். ஏன்னால் தொடரந்து வேலையில் ஈடுபட முடியாமல் தவித்து இடையில் வேலையைவிட்டு புறப்பட்டு வந்துவிட்டேன்
(தொடரும்….)