ஜெனீவாவில் புலம்பெயர் புலி அமைப்புகள் நடத்தும் துப்புக்கெட்ட அரசியலின் 10 பலன்கள்

1.    சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய இனப்படுகொலையை ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கி உலக மக்களின் பார்வையிலிருந்து அன்னியப்படுத்தினார்கள்.
2. போராட்ட அரசியலை லொபி அரசியல் என்ற குறுக்கு வழிக்குள் முடக்கினார்கள்.
3. நாட்டில் தமது முகவர்களை இனம் கண்டு அவர்கள் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்தனர்.
4. அமெரிக்காவின் கைப்பொம்மை அரசான ரனில்-மைத்திரி பேரினவாத அரசை நிறுவ உதவினர்.
5. ஜெனீவா முன்றலில் போராட்டம் என்ற பெயரில் ‘எமது நாடு தமிழீழம்இ எமது தலைவர் பிரபாகரன்’ என்று மட்டும் முழக்கமிட்டு உலக மக்களின் பார்வையிலிருந்து ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்தினர்.
6. கடந்த எழு வருடங்களாக ஜெனீவாவைக் காரணமாக முன்வைத்து முழுமையான போராட்டத்தையும் முடக்கினர்.
7. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் உலகம் முழுவதும் அழிவுகளை நடத்தும் அமெரிக்காவிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் போர்க்குற்றத்தைத் தண்டிக்குமாறும் கோரிக்கை விடுத்துஇ மக்களின் தியாக உணர்வை கொச்சைப்படுத்தினர்.
8. அமெரிக்க அரசு இலங்கை அரசை வழி நடத்தஇ அமெரிக்க அரசின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டு இலங்கை அரசின் மறைமுக ஆதரவாளர்களாயினர்.
9. உலகின் அழிக்கப்பட்ட போராட்ட அமைப்புக்கள் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு தம்மை மீளமைத்துக்கொண்ட படிப்பினைகளை எல்லாம் நிராகரித்து அமெரிக்கஇ இந்திய அரசுகளின் அடியாள் படைகளாகச் செயற்பட்டனர்ஃ
10. தமது உள்ளூர் பினாமிகள் ஊடாக இன்றும் அமெரிக்காவையும் அதன் அடிமை நிறுவனமான ஐ.நாவையும் இன்னும் நம்புமாறு உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றனர்.