தமிழ் மக்கள் பேரவை என்ற இன்றைய முயற்சியும்…….!

(சாகரன்)

ஆதிக்க தமிழ்த் தலமைகள் அன்று தொட்டு இன்று வரை தமது பதவிக்கான கோஷங்களை மட்டும் முன்வைத்தே அரசியல் நடாத்தி வருகின்றனர். இவர்களிடம் எப்போதும் தாம் சார்ந்த சமூகத்தின் எதிர்காலம்பற்றி சீரிய பார்வையோ, திட்டமோ, தீர்க்க தரிசனமோ, அல்லது இராஜதந்திரமோ திறமையோ இருந்தது இல்லை. நாம் ‘தோற்றுப் போனவர்கள்’ என்ற தோற்றப்பாட்டிற்கு சிங்களப் பேரினவாதத்தை விட தமிழ் குறும் தேசியவாதமே முக்கிய காரணியாக இருந்துகொண்டே வருகின்றது. தமிழ் மக்கள் பேரவை என்ற இன்றைய முயற்சியும் இந்த தட வழிப்பாதையில் பயணிக்கப்படவே உருவானதாக தோன்றுகின்றது. ஆனாலும் இங்கொன்றும் அங்கோன்றும் என நம்பிக்கைகள் தமிழ் தரப்பில் அவ்வப்போது துளிர்விட்டாலும் முளையுடனேயே அவை கருக வைக்கப்பட்டதே இங்கு யதார்த்தம்……? சோகம். ஆனாலும் நாம் தொடர்ந்தும் முயல்வோம்……! வெல்வோம்…. என்ற நம்பிக்கை எமக்கு உண்டு