தேர்தல் வன்முறை

1956 பொதுத் தேர்தலில் திரு.வி.என. நவரத்தினம் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.இது காங்கிரஸ் கட்சியின் பலமான கோட்டை.இவரை ஒருநாள் வழியில் கண்ட காங்கிரஸ் எம்.பி குமாரசாமி என்னை எதிர்த்து என்ன தைரியத்தில் போட்டியிடுகிறாய் என கிண்டலாகவே கேட்டார்.அந்தளவு உறுதியான செல்வாக்குடன் குமாரசாமி இருந்தார்.


என்ன செய்வதென்று அறியாத தமிழரசுக்கட்சி மாட்டுக்கு மாலை போட்ட சாதி விவகாரத்தை கையில் எடுத்தது.இது காங்கிரஸ் கட்சியை கொஞ்சம் ஈடாட செய்தது. நவரத்தினம் கட்சி கூட்டம் நடாத்தும் ஊர்களில் அதே நாட்களில் குமாரசாமி திடீர் கோவில் பூசைகள் அன்னதானங்கள் செய்து கவனத்தை திருப்பினார்.

நாட்கள் செல்ல தமிழரசு ஆதரவு பயத்தை ஏற்படுத்த கூட்டங்களை குழப்ப கூலிப்படைகளை உருவாக்குனார்.நவரத்தினம் நிலை குலைந்தார்.இறுதுயில் கொடிகாம்ம் அய்யாவின் உதவி கேட்டார்.அய்யாவால் தனித்து நின்று எதிர்க்க முடியவில்லை .அய்யா எங்கள் ஊர் இரத்தினத்தின் உதவியைக் கேட்டார்.அய்யாவின் நட்புக்காகவும் மாட்டுக்கு மாலை போட்டு எமது ஊரவர்கள் அவமானப்பட வைத்ததற்காகவும் சம்மதித்தார்.

குமாரசாமியின் கூலிப்படைகளால் இவர்களை தாக்குப்பிடிக்க முடியவில்லை .குமாரசாமி வன்முறையை கையில் எடுத்ததாலும் சாதியை முன்னிறுத்தியதாலும் அத் தேர்தலில் தோல்வி கண்டார்.அளப்பரிய சேவை செய்தும் தவறான போக்கால் தோல்வி கண்டார்.

அய்யாவுக்கும் அந்த கூலிப்படைக்கும் இடையிலான மோதல்கள் 1984 வரை அடுத்த தலைமுறை வரை தொடர்ந்தது. இரத்தினம் 1968 மாசி மாதம் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.வி்என். நவரத்தினம் தலை காட்டவே இல்லை.அய்யா அடுத்து கொல்லப்பட்டார்.அதை அரசியல் படுகொலையாக விளம்பரப் படுத்தினர். அய்யா சாதிக்கெதிரான போராட்டத்தை ஆதரித்தவர்.

(Vijaya Baskaran)