சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 2)

அமெரிக்காவும் ஏனைய அதன் முதலாளித்துவ சிந்தனைக் கூட்டாளிகளும் இணைந்து 1949 ஆம் ஆண்டில், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)(Nato) என்பது யு.எஸ்., கனடா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒரு சக்தியாக உருவாக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சோவியத் யூனியன் சோசலிச நாடுகளை இணைத்து வார்சோ(Warsaw) என்ற அமைப்பை உருவாக்கியது. உண்மையில் இதற்கான முன்னெடுப்பை சோவியத் யூனியன் எடுக்கவில்லை. ஏனைய சோசலிச நாடுகள் எடுத்த முன்னெடுப்பில் சோவியத் யூனியன் இதில் இணைந்து கொண்டதே வரலாறு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சோவியத் யூனியன் அதன் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தனது நட்பு கொள்கை வட்டத்திற்குள் கொண்டு வந்தது. ஜேர்மனியின் கிழக்கு பகுதி சோவியத் ஒன்றியத்தின் சோசலிச கொள்கையின் அடிப்படையிலும் மேற்கு ஜேர்மன் அமெரிக்காவின் முதலாளித்துவ முகாமிற்குள்ளும் தம்மை இணைத்துக் கொண்டன.

1950 களில், மேற்கு ஜேர்மனி நேட்டோவில் இணைந்து கொண்டது. மேற்கு ஜேர்மனியை எல்லையாகக் கொண்ட நாடுகள் மீண்டும் ஒரு இராணுவ சக்தியாக சோசலிச நாடுகளுக்கு எதிராக செயற்படலாம் என்ற அச்சம் எற்பட்டது.

இந்த அச்சுறுத்தலால் அன்று சோசலிச நாடுகளாக இருந்த செக்கோஸ்லோவாக்கியா போலந்து மற்றும் கிழக்கு ஜேர்மனி போன்ற நாடுகள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்க முயன்றன. இறுதியில், ஏழு நாடுகள் வார்சா(wasaw) ஒப்பந்தத்தை உருவாக்கி ஒன்றாக செயற்படத் தொடங்கின. 1955 இல் வார்சா(Warsaw) ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வார்சா நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் சோவியத் யூனியன், அல்பேனியா, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா, ருமேனியா மற்றும் கிழக்கு ஜெர்மனி ஆகியவை வார்சா ஒப்பந்த அமைப்பில்

(Warsaw Treaty Organization) கையெழுத்திட்டு இணைந்து கொண்டன.

வார்சா ஒப்பந்தத்தின் (Warsaw Pact) உறுப்பினர்கள் தங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் ஒருவரையொருவர் பாதுகாப்பதாக உறுதியளித்தாலும், அதன் உறுப்பினர்களின் உள் விவகாரங்களில் தலையிடாததை வலியுறுத்தி, கூட்டு முடிவெடுப்பதில் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டதாகக் கூறப்பட்டாலும், சோவியத் யூனியன் செல்வாக்கு அதிகம் இவ் அமைப்பிற்குள் இருந்தது தவிர்க முடியாத வரலாற்றுப் போக்காகும்.

எவ்வாறு நேட்டோ நாடுகளில் அமெரிக்காவின் செல்வாக்கு போக்கு அதிகம் உள்ளதோ அதனைப் போன்றதாகவே இங்கும் இருந்தது.

வார்சா உடன்பாடு 36 ஆண்டுகள் நீடித்தது. அந்த சமயத்தில், நேட்டோ அமைப்புக்கும் வார்சா ஒப்பந்த அமைப்பிற்கும் நேரடியாக மோதல் இருக்கவில்லை. ஆனால் பனிப்போர் அவற்றிற்கு இடையே தொடர்ந்து கொண்டே இருந்தன.

குறிப்பாக சோவியத் ஒன்றியத்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் நடைபெற்ற விடுதலைப் போராட்த்தில் இந்தப் பனிப் போர் இருந்தது. அதாவது போரில் அமெரிக்காவும்… அதன் தலமையிலான நேட்டோ(Nato)வும் சோவியத் யூனியனும் அதன் தலமையிலான வார்சா(Warsaw) நாடுகளும் நேரடியாக (மோதலில்) ஈடுபடாமல் தமது ஆதரவு சக்திகளுக்கு போர்களத்தில் மறைமுக ஆதரவு வழங்கி ஊக்கிவித்தனர்.

சண்டையற்ற இராணுவ சம பலத்தை பேணுதல் இதனைத்தான் பனிப் போர் என்று அழைத்துக் கொண்டனர் அரசியல் ஆய்வாளர்கள்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு 1991 முன்பு இல் – பிராகாவில் அந்த அமைப்பு(Warsaw) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

கிழக்குத் (ஐரோப்பிய, ஆசிய)தொகுதியில் அரசியல் கிளற்சிகள் போலந்தில் 1989 இல் தொடங்கியது. இது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிற புரட்சிகளைத் தூண்டியது, கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் மீண்டும் இணைத்த பெர்லின் சுவர் அழிக்கப்பட்டது. (அதிகாரப்பூர்வ மீள் இணைப்பு சோசலிச கிழக்கு ஜேர்மனி முதலாளித்துவ மேற்கு ஜேர்மனி இடையே அக்டோபர் 3, 1990 இல் ஏற்பட்டு ஜேர்மன் என்ற ஒரே நாடு உருவானது).

இதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியனின் மாநிலங்களில் ஒன்றியமாக செயற்படுதல் என்பதற்கு எதிராக தனியாக பிரிந்து செல்லல் என்ற போக்கு வலுவடைந்து சோவியத் யூனியன் ஒரு நாடாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக பலவீனமடைந்தது.

இதற்கான எல்லா வகையான கொல்லை வழி குழிப்பறிப்புகளையும் நேட்டோ நாடுகள் செய்தன. சோவியத்தில் நாடுகள் சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் மாறாக அமெரிக்கா போன்ற நாடுகள் தமது நாட்டின் மாநிலங்கள் பிரிந்து செல்லாமல் கவனித்துக் கொண்டன.

கூடவே தனித்தனியாக இருந்த இரு வேறு வேறு கருத்தியலுடன் ஆட்சி நடைபெற்ற கிழக்கு மேற்கு ஜேர்மனிகளை இணைக்கவும் செய்தன என்ற அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சோவியத் ஒன்றியம் டிசம்பர் 31, 1991 சுய விருப்பத்தின் அடிப்படையில..? தனித் தனியாக பிரிந்து 15 நாடுகள் உருவானது. அவை சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த 15 நாடுகள்: ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், எஸ்டோனியா, ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான்.

இதே போன்ற செயற்பாடு செக்கோசிலாவிக்யாவிலும் தொடர்ந்த காலங்களில் நடைபெற்றது.

சோவியத் ஒன்றியத்தின் பல நாடுகள் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனி நாடுகளாக உருவான பின்பு பல பிரச்சினைகளை எதிர்கொண்டன.

தமது நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிறுவுவதற்கு அப்பால், தமது நாடுகளை சந்தைப் பொருளாதாரங்களுக்கு மாறுவதற்கும், தொழில்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், மக்கள் தொகை வீழ்ச்சியைச் சரிசெய்வதற்கும், அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் மதங்களை நிறுவுவதற்கு அல்லது மீண்டும் நிறுவுவதற்கும் போராடின.

சோவியத் யூனியனில் இருந்து சுதந்திரம் பெற்றதன் விளைவாக பல சோவியத் நாடுகள் இன்னும் கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கின்றன.

சோவியத் ஒன்றியம் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்குமான முன்மாதிரியாக… நம்பிக்கையாக… அமைந்திருந்தது. நாட்டு அரசும், அரசியல் நிறுவனமும் அனுமதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சியான சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழேயே இயங்கின.

சோவியத்தின் இறுதி அதிபர் மிகைல் கோப்பச்சேவ் பதவி ஏற்கும் வரை இது தொடர்ந்தது. அவர் பதவி ஏற்ற பின்பு சோவியத் யூனியனில் உருவாக்கிய பெரெஸ்ட்ரோயிகா(Perestroika – இது ரஷ்ய மொழியில் அமைந்த சொல்) (ரஷ்யன் ‘மறுசீரமைப்பு’) மற்றும் கிளாஸ்னோஸ்ட்(Glasnost – இது ரஷ்ய மொழியில் அமைந்த சொல்)(ரஷ்யன் ‘திறந்த வெளி’) என்ற சீர்திருத்தங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சோவியத் ஒன்றியத்தில் உள்ள நாடுகள் தமது இறையாண்மையை பயன்படுத்தி பிரிந்து செல்லாம் என்ற அரசியல் சுதந்திரம் தனியாக 15 நாடுகள் உருவாவதற்கு வாய்பை ஏற்படுத்தின.

கோப்பச்சேவ் தலமையிலான சோவியத் யூனியன் மேற்கு நாடுகளுடன் அதிககளவில் பேச்சுவார்தையில் ஈடுபட்டது. கோப்பசேவ் பிரிட்டிஷ் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் முக்கிய உறவுகளை உருவாக்கினார் மார்கரெட் தாட்சர், மேற்கு ஜெர்மன் தலைவர் ஹெல்முட் கோல் மற்றும் மிகவும் பிரபலமான அமெரிக்காவின் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன்.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் விலக்கப்பட்டன. சோவியதிற்குள் சரிந்து வரும் பொருளாதார நிலமைகளை கரு

த்தில் கொண்டு சீர் திருத்தங்களை மேற்கொள்ள முயன்றார்.

கூடவே ஐக்கியப்பட்டு ஒன்றியமாக சோசலிச கொள்கையில் பலமாக பயணித்துக் கொண்டிருந்த சோவியத்தை வீழ்த்துதல் என்ற அமெரிக்கா அதன் கூட்டமைப்பு நேட்டோவின் பொறி கோபபர்சேவ் இன் நாடுகளின் இறையாண்மையை பிரிந்து செல்வதை அங்கீகரித்தல் என்ற அதிக தாரளவாதம் என்று இரண்டுமாக சோவியத்யூனியன் பல நாடுகளாக சிதறுவதறகு வழி வகுத்துவிட்டது. இன்து அவை தமக்குள் மோதும் நாடுகளாகவும் முட்டுச் சந்திற்குள் வந்து நிற்கின்றன.

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள் இங்கு ஊர் பலவாக பிரிந்ததினால் ஆயுத விற்பனைக் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகி இருக்கின்றது.

இந்த சோவியத் யூனியனின் சிதறல் ஆரம்பமான போது… சோவியத் யூனியன் தொடர்ந்தும் சோவியத் ஒன்றியமாக செயற்படுவது என்று சோவியத் ஒன்றியத்தின் 9 நாடுகள் ஆதரவாகவும் 6 நாடுகள் எதிராகவும் என்ற நிலமை ஏற்பட்ட போது பொறிஸ் யெல்சன் போன்ற ரஷ்சிய தலைவர்களின் சித்து விளையாட்டினால் பெரும்பான்மை அடிப்படையிலான முடிவு என்ற விடயம் அடிபட்டு ஒன்றாக செயற்பட முடியாத நிலமையே இறுதியில் ஏற்பட்டது.

இதற்கு பின்புலமாக மேற்குலக நாடுகள் கண இடைவெளிகள் இன்றி செயற்பட்டனர் என்பது அன்றைய கால கட்டத்து அரசியல் நகர்வுகள் மேற்குலக ஊடகங்களின் ஒரு தலைபட்சமான பிரச்சார வாடையிலான செய்திகள் நிறுவி நின்றன.

தற்போதைய நிலையில் சீனாவின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதையும் அடுத்த பகுதிகளில் பார்ப்போம்

(கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது தொடரும்….)