வலது தீவிரவாதத்தின் நிழலில் – 07: ஜேர்மன் அதிவலதின் கதை: ஒரு பின்கதைச் சுருக்கம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில வாரங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயன்ற அதிவலது-நாஜிகள் கைது செய்யப்பட்ட நிகழ்வு அதிவலது தீவிரவாதத்தின் ஆபத்தை ஜேர்மனிக்கு மட்டுமன்றி முழு ஐரோப்பாவிற்கும் காட்டி நின்றது. ஹிட்லரின் காலத்தில் தீவிர அதிவலதின் வடிவமாக, நாஜிசத்தின் தலைமையகமாக, கோட்பாட்டின் கலங்கரை விளக்கமாக ஜேர்மனி இருந்தது.இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் தோல்வி அதற்கு முடிவு கட்டியது.