ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பா?? இந்தியாவில் ஹமாஸ் தடை செய்யப்பட்டுள்ளதா??

1987ல் இஸ்ரேலை ஒரு நாடாகவே ஹமாஸ் அமைப்பு கருதவில்லை, அவர்கள் இன்று வரை இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்கிற பதத்துடன் தான் அழைத்து வருகிறார்கள். ஆனால் 2006ல் அவர்கள் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார்கள். 2006 தேர்தல் என்பது ஏதோ அவர்களாக நடத்திக்கொள்ளவில்லை, சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐநாவின் அதிகாரிகளின் முன்னெடுப்புடன் தான் அந்த தேர்தல் நடைபெற்றது.

ஹமாஸ் 2006ல் வெற்றிபெற்று காசாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது முதல் மெல்ல தங்களின் தீவிரத்தன்மையை கைவிட்டு இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எல்லா வகையிலும் முயன்றது. ஐநாவின் 1967 எல்லை பகிர்வை ஏற்றது, ஆனால் அப்படியான ஒரு அமைதி உடன்படிக்கையிலும் இஸ்ரேல் ஒத்துழைக்கவில்லை.

காசாவில் பாலஸ்தீனர்கள் ஹமாஸ் அமைப்பையும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் ஃப்தா அமைப்பையும் தீர்வு கணும் அமைப்புகளாக, நம்பிக்கையுடன் பார்த்தார்கள்.

ஆயுதங்கள் ஏதும் இல்லாத மேற்கு கரை பாலஸ்தீனர்கள் வசம் இருந்து நிலம் ஏறக்குறைய நிர்மூலமாகிவிட்டது, அவர்களின் வாழ்வு மொத்தமும் இஸ்ரேலின் கண்காணிப்புக்குள், கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.அவர்களின் நிலங்களின் நாற்புறங்களிலும் இஸ்ரேல் சூழ்ந்துள்ளது.

ஆனால் காசாவின் ஒரு சதுர அடி நிலத்தையும் ஹமாஸ் விட்டுக்கொடுக்காததால் தான அவர்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் பெருகியது. காசாவின் ஒரு புறம் எகிப்து நாடு இருப்பதால் அவர்களால் கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது.

ஹமாசை ஒரு தீவிரவாத அமைப்பாகச் சித்தரிப்பதில் உலக ஊடகங்களும் வதந்தி தொழிற்சாலைகளும் வெற்றிப் பெற்றிருக்கலாம் ஆனால் ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா, பிரிட்டன் , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில உதிரி நாடுகள் அறிவித்துள்ளதே தவிர உலகம் முழுவதும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு தான்…

ஈரான்
கத்தார்
துருக்கி
லெபனன்
ஈராக்
ஏமன்
பிரேசில்
சீனா
எகிப்து
சவுதி அரேபியா
சீரியா
ஆப்கானிஸ்தான்
நோர்வே
பிலிப்பைன்ஸ்
ஸ்விசர்லாந்து
ஜோர்தன

இந்த பட்டியலில் இன்னும் 100 நாடுகள் உள்ளது.இவை எல்லாம் ஹமாஸை தடை செய்யாத நாடுகள்….

இதை எல்லாம் விடுங்கள் இந்தியாவின் சங்கிகள் இஸ்ரேலுடன் இணைந்து ஃபயர் விடுகிறார்கள், ஆனால் இந்திய அரசால் ஹமாஸ் ஒரு போதும் தீவிரவாத அமைப்பாகக் கருதப்பட்டதில்லை. காங்கிரஸ் அரசுகள் முதல் இன்று ஆட்சியில் உள்ள மோடியின் பாஜக அரசு வரை ஹமாஸ் தடை செய்யப்பட்ட இந்திய அமைப்புகளின் , உலக அமைப்புகளின் பட்டியலில் இல்லை.

அதை விட முக்கியம், ஐநா சபை ஹமாஸை ஒரு அமைப்பாகவே அங்கீகரிக்கிறது என்றால் இந்த பொய்யர்களின் பிரச்சாரம் எத்தனை வலிமையானது என்பதை யோசித்துப்பாருங்கள்.

இந்தியா தடை செய்யாத ஒரு அமைப்பின் மீது இந்தியர்கள் அனைவரையுமே மனதளவில் ஒரு தடையாக உணரும் படி இந்திய ஊடகங்கள் இரவும் பகலும் இயங்கி வருகின்றனர். பாலஸ்தீனத்தின் விடுதலையின் குரல்வளையை நெறிக்க இஸ்ரேல் முயன்று வருகிறது. ஹமாஸ் அழித்துவிடுவதன் மூலம் பாலஸ்தீனர்களை கொட்தடிமைகளாக மாற்றவே இஸ்ரேல் துடிக்கிறது.

ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலின் பார்வையில் தீவிரவாதிகள் என்றால் நிச்சமயாக இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வரை பிரித்தானியர்களின் பார்வையில் யார் எல்லாம் தீவிரவாதிகள் என்று நினைத்துப்பாருங்கள்.

ஜான்சி ராணி, பகத் சிங், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதப்ரனார், சுந்தர லிங்கம், சர்தார் வல்லபாய் படேல், ஜவகர்லால் நேரு, காந்தி என அனைவருமே தீவிரவாதிகள் தான்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தான் ஆகப்பெரிய தீவிரவாதி என்று ஒரு ஊடகம் சொன்னால் என்ன செய்வீர்கள். நாட்டையும் நிலத்தையும் அடைமானம் வைப்பீர்களா அல்லது அதை மீட்கப் போராடுவீர்களா???